ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

ரயில்வே தேர்வு எழுத ஆவடியில் 5 கிலோ மீட்டர் தூரம் காத்திருந்த இளைஞர்கள்..

ரயில்வே தேர்வு எழுத ஆவடியில் 5 கிலோ மீட்டர் தூரம் காத்திருந்த இளைஞர்கள்..

நீண்ட வரிசையில் காத்திருந்த இளைஞர்கள்

நீண்ட வரிசையில் காத்திருந்த இளைஞர்கள்

Railway Exam : ரயில்வே உடல் தகுதி தேர்வுக்காக ஆவடியில் 5 கிலோ மீட்டர் தூரம் வரை காத்திருக்கும் தேர்வர்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Avadi, India

மத்திய அரசின்  ரயில்வே தேர்வு நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதற்கான  ஆவடியில் உள்ள 2ம் காவலர் பயிற்சி வளாகத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உடல் தகுதி தேர்வில் பங்குபெற வடமாநில இளைஞர்கள் சுமார் 5 கிலோமீட்டர் தூரம்வரை சாலையின் ஓரங்களில் காத்துக்கொண்டிருக்கின்றனர். தற்போது 1000 மீட்டர் ஒட்டப்பந்தயம், பளு தூக்குதல் ஆகிய தேர்வுகள் தொடர்ந்து  நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் இருந்தும் பீகார், ஒரிசா, உத்தரகாண்ட், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள் குவிந்துள்ளனர்.

இங்கு நாளொன்றுக்கு  5000 பேர் வீதம் 5 நாட்கள் தேர்வுக்கு 25000 பேர் வீதம் அனுமதி என இருக்கும் நிலையில், மேலும் தேர்வு நடைபெறும் இடத்தில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. 1000 மீட்டர் ஓட்டப்பந்தயத்திற்காக  கலந்துகொள்ளும் தேர்வர்களின் கால்களில் பிரத்யேக ரேடியோ சிக்னல் கருவி பொருத்தப்பட்டு ஓடும் நேரத்தையும், ஓடும் தூரத்தையும் கணினி மூலம் அளவீடு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தேர்வர்கள் உடலில் அனுமதி சீட்டு, வரிசை எண், க்யூ ஆர் கோட் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் இடம் முழுவதும் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு உடல் தகுதி தேர்வு நடைபெறுகிறது. ஆண்கள், பெண்கள் அனைவரும் இதில் கலந்துகொள்ள பதிவு செய்யப்பட்டிருப்பதாக தேர்வு நடத்தும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர் : கன்னியப்பன் 

First published:

Tags: Avadi, Railway Jobs, Tamil News, Thiruvallur