ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

திருத்தணி முருகன் கோவிலில் சிறப்பு கட்டண தரிசனங்களில் மாற்றம்... இனி இந்த டிக்கெட்டில் மட்டுமே தரிசனம்

திருத்தணி முருகன் கோவிலில் சிறப்பு கட்டண தரிசனங்களில் மாற்றம்... இனி இந்த டிக்கெட்டில் மட்டுமே தரிசனம்

திருத்தணி முருகன் கோவில்

திருத்தணி முருகன் கோவில்

Thiruvallur District | திருத்தணி முருகன் கோவிலில் ரூ.25,150  சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டு இந்து அறநிலைய துறை ஆணையர் உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Thiruvallur, India

  திருத்தணி முருகன் கோவிலில் ரூ.25,150  சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டு இந்து அறநிலைய துறை ஆணையர் உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து பக்தர்கள் பொது வழி மற்றும் 100 ரூபாய் தரிசன வழியில் சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

  திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலில்  தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் பொது வழியில்  சுவாமி தரிசனம் செய்ய இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர்.

  மேலும் பக்தர்கள் வசதிக்காக ரூ.25, 100, 150 ஆகிய கட்டணத்தில் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு விரைவு தரிசனத்திற்கு பக்தர்கள்  அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

  இந்நிலையில், காலை முருகப்பெருமானை தரிசிக்க பக்தர்கள் ரூபாய் 25, 150 விரைவு தரிசனம் வழியில் வழக்கம் போல் செல்ல குவிந்தனர். அப்போது அங்கு வந்த  திருக்கோவில் ஊழியர்கள்  இந்து அறநிலைத்துறை ஆணையரின் உத்தரவின்படி ரூ. 25, 150  சிறப்பு தரிசன வழிகள் மூடப்பட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து பக்தர்கள் பொது வழி மற்றும் 100 ரூபாய் தரிசன வழியில் சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

  இதுகுறித்து கோவில் அதிகாரிகள் தெரிவித்ததாவது, “திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இந்து அறநிலைத்துறை வழிகாட்டுதலின்படி  ரூ. 25, 150  சிறப்பு தரிசன  வழியை ரத்து செய்ய உத்தரவிடுமாறு திருத்தணி முருகன் கோவில் துணை ஆணையர் விஜயா இந்து அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபருக்கு கோரிக்கை வைத்திருந்தார். இதனையடுத்து திருத்தணி முருகன் கோவிலில் ரூ. 25 மற்றும் ரூ.150  சிறப்பு தரிசன  வழியை ரத்து செய்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

  இதன் காரணமாக ரூ. 25, ரூ.150 சிறப்பு தரிசன வழி மூடப்பட்டுள்ளது. மேலும் மூலவர் முருகப்பெருமானை தரிசிக்க வரும் பக்தர்கள் 10 அடி  தூரத்தில் இருந்து தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் சிறப்பு தரிசனத்திற்கு வரும் உயர் அதிகாரிகள் உரிய அனுமதி கடிதம் பெற்று வந்தால் மட்டுமே சிறப்பு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்” என தெரிவித்தனர்.

  செய்தியாளர் : சசிகுமார்

  Published by:Karthi K
  First published:

  Tags: Local News, Murugan temple, Thiruvallur