ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

திருமண ஆசைக்காட்டி 10ம் வகுப்பு மாணவியை சீரழித்த இளைஞர்- காதலனை நம்பிசென்ற மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

திருமண ஆசைக்காட்டி 10ம் வகுப்பு மாணவியை சீரழித்த இளைஞர்- காதலனை நம்பிசென்ற மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

10ஆம் வகுப்பு மாணவியை கொலை செய்த காதல் கைது

10ஆம் வகுப்பு மாணவியை கொலை செய்த காதல் கைது

Thiruvallur | மாதர்பாக்கம் அருகே காதலிப்பதாக கூறி பத்தாம் வகுப்பு மாணவியை மது ஊற்றி நண்பர்கள்  2 பேர் சேர்ந்து பாலியல் சீண்டல் செய்துள்ளனர். இதனால் திருமணம் செய்து கொள்ள மாணவி தொடர்ந்து வற்புறுத்தியதால் பள்ளி மாணவியை கழுத்தை நெரித்து கொலை செய்து ஏரியில் வீசிய காதலன் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். 

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Thiruvallur (Tiruvallur), India

  திருவள்ளூர் மாவட்டம் பிச்சாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம்(45). இவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி திலகா(37) தனது 15 வயது மகளான உஷா உடன் நெல்வாய் கிராமத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் பெரிய பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமி உஷா கடந்த 10 ஆம் தேதி வெளியே சென்றவள் வீடு திரும்பவில்லை. அதனால் உறவினர்கள் பல்வேறு இடங்களில்  அவளை தேடி வந்தனர்.

  இந்த நிலையில் கொள்ளனுர் ஏரியில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, விரைந்த பாதிரிவேடு காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமியின் கழுத்திலும் முகத்திலும் காயங்கள் இருந்ததால் சிறுமி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் பள்ளிக்கு சென்று வரும்போது மூக்கரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் (19) என்ற இளைஞர் உடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது.

  இதனை அடுத்து தலைமறைவாக இருந்த பிரவீனை பிடித்து  விசாரித்ததில் சிறுமி உஷாவை காதலிப்பது போல் நடித்து  அவளுக்கு மது ஊற்றி கொடுத்து பலமுறை நெருக்கமாக பழகியதுடன் 17வயதான நண்பனுடன் சேர்ந்து பாலியல் சீண்டல்களும் செய்ததாக காவல்துறையினரின்  வாக்குமூலத்தில் பகீர் தகவலை அளித்துள்ளான்.

  மேலும் காதலன் பிரவீன் மாணவியை பலமுறை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சீரழித்துள்ளார். இந்த நிலையில் மாணவி உஷா தன்னை திருமணம் செய்து கொள்ள பிரவீனை கட்டாயப்படுத்தியுள்ளார்.  இதில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதால் அவளை தீர்த்து கட்ட தனது நண்பனான  அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (17) என்பவனுடன் சேர்ந்து திட்டம் தீட்டியதாகவும், அதன்படி சம்பவத்தன்று தனது காதலி உஷாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வரவழைத்தோம் எனக் கூறினார்.

  பின்னர் மாந்தோப்பில் மது  வாங்கி மூவரும் அருந்தியதாகவும்,  மயங்கிய மாணவியை கட்டையால் தலையில் அடித்ததாகவும் கூறியுள்ளான். அதில் அவள் மயங்கியதும் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த கயிற்றால் கழுத்தை நெரித்து தனது நண்பனுடன் சேர்ந்து கொலை செய்து சடலத்தை அங்கிருந்த ஏரியில் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

  Also see... கார் வெடிப்பு சம்பவம் : என்ஐஏ விசாரிக்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

  இதனை அடுத்து பிரவீன், அவனது நண்பன் ரஞ்சித் (17) ஆகியோரை கைது செய்த போலீசார், இருவருக்கும் வேறு ஏதேனும் இது போன்ற குற்ற வழக்குகளில் தொடர்பு உள்ளதா ? எனவும் விசாரித்து வருகின்றனர். திருமணம் செய்வதாக நாடகமாடி காதலிப்பதாக நடித்து பள்ளி மாணவி ஒருவர் தனது காதலனால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  செய்தியாளர்: பார்த்தசாரதி, திருவள்ளுர்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Crime News, Love, Murder, Sexual abuse, Thiruvallur