திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டவர் போலீசில் சிக்கியுள்ளார். போலீசாரிடம் சிக்கிய பைக் திருடனிடம் இருந்து ரூ.35 லட்சம் மதிப்புள்ள 45 திருட்டு பைக்குகள் மீட்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, திருமுல்லைவாயல், அன்னனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தன.இது தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகன திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.வாகன திருடர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
பைக் திருட்டு சம்பவ இடங்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 200 சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.இதில், ஆவடி, திருமுல்லைவாயல், அன்னனூர் பகுதிகளில் ஒரே நபர்தான் அனைத்து பைக்குகளையும் திருடியது தெரியவந்தது.தொடர்ந்து விசாரணை நடத்தி ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த கரிவேடு கிராமத்தை சேர்ந்த கணபதி என்பவரை போலீசார் பிடித்தனர்.
Read More : பிச்சை எடுத்த 1 லட்ச ரூபாயை கோவிலுக்கு நன்கொடையாக கொடுத்த மூதாட்டி!
சிசிடிவி கேமிரா காட்சிகளில் பதிவான நபர் இவர்தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 3 ஆண்டுகளாக பைக் திருடி விற்பனை செய்து வருவது தெரிந்தது.இதற்காக அரக்கோணத்தில் இருந்து மின்சார ரயிலில் வந்து பைக் திருடியதும் தெரியவந்தது.கணபதி பதுக்கி வைத்திருந்த 45 திருட்டு பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரூ.35 லட்சம் மதிப்புள்ள 45 பைக்குகளும் திருமுல்லைவாயல் காவல் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.திருவள்ளூர் மாவட்டத்தில் பைக்குகளை பறிகொடுத்தவர்கள் திருமுல்லைவாயல் காவல் நிலையத்துக்கு வந்து தங்களது பைக் மீட்கப்பட்டுள்ளதா என ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.மேலும் 45 பைக்குகள் மீட்கப்பட்ட செய்தி திருவள்ளூர் மாவட்ட வாட்ஸ்அப் குழுக்களிலும் வேகமாக பரவி வருகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bike Theft, Theft, Thiruvalluvar