மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் சென்னை தண்டையார்பேட்டையில், பேரிடர் மீட்புக்குழுவினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பேரிடர் நேரத்தில் வீட்டில் இருக்கும் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வைத்தே தப்புவது எப்படி என அவர்கள் செயல்முறை விளக்கம் செய்துகாட்டினர்.
வங்க கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என சென்னை வானிலை அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தமிழகத்தில் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு போர்க்கால நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் பேரிடர் மீட்பு குழு மற்றும் தீயணைப்பு துறை சார்பில் தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல குழு அலுவலகத்தில் பேரிடர் காலத்திலன் போது பொதுமக்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர் தலைமையில் மண்டல குழு தலைவர் நேதாஜி யு.கணேசன் முன்னிலையில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழு வட சென்னை மாவட்ட அலுவலர் மேற்பார்வையில் லோகநாதன் செயல் விளக்கத்துடன் நடைபெற்றது.
Also see... நெருங்கும் மாண்டஸ்.. புயல் கரையை கடக்கும் நேரத்தில் கவனத்தில் இருக்க வேண்டிய விஷயங்கள்!
நாம் அன்றாட பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக், ட்ரம் டயர் டியூப், தண்ணீர் கேன் உள்ளிட்ட பொருட்களை வைத்து மழை வெள்ள காலத்தில் தங்களை எப்படி காப்பாற்றிக் கொள்வது என செயல் விளக்கமும் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள் மின்வாரிய அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகளும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: அசோக் குமார், திருவெற்றியூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cyclone Mandous, Disasters, Thiruvottiyur Constituency