ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

ஆன்லைன் மோசடியில் சிக்காமல் இருப்பது எப்படி? GOOGLE மற்றும் நியூஸ் 18 நெட்வொர்க் விழிப்புணர்வு பிரச்சாரம்

ஆன்லைன் மோசடியில் சிக்காமல் இருப்பது எப்படி? GOOGLE மற்றும் நியூஸ் 18 நெட்வொர்க் விழிப்புணர்வு பிரச்சாரம்

ஆன்லைன் மோசடி குறித்து GOOGLE, நியூஸ் 18 நெட்வொர்க் விழிப்புணர்வு

ஆன்லைன் மோசடி குறித்து GOOGLE, நியூஸ் 18 நெட்வொர்க் விழிப்புணர்வு

Awareness of online fraud | இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் நின்று கேட்ட சிலரிடம் நிகழ்ச்சி குறித்து கேள்வி எழுப்பி சரியான பதிலை தெரிவித்தவர்களுக்கு  google மற்றும் நியூஸ் 18 நெட்வொர்க் பெயர் பொறித்த டி-ஷர்ட்டுகள் மற்றும் தொப்பிகளை வழங்கி அணிவித்து  கௌரவித்தனர்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Thiruvallur, India

  இணையதள பாதுகாப்பு  ஆன்லைன் மோசடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக google நிறுவனம்  நியூஸ் 18 நெட்வொர்க் நிறுவனத்துடன் இணைந்து “ரகோ து கதம் ஆகே” என்ற “சேஃபர் வித் google” என்ற ஹேஷ்டேக் மூலம் நாடு முழுவதும் வாகனத்தில் சென்று முக்கிய நகரங்களில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

  உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், தெலங்கானா, ஆந்திரா என்று பயணித்த இந்த விழிப்புணர்வு பிரச்சார பயணமானது தமிழகத்தை வந்தடைந்தது. வடமாநிலத்திற்கு தமிழகத்தின் நுழைவு வாயிலாக உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட தலைநகர் திருவள்ளூர், புழல் உள்ளிட்ட இடங்களில் மக்கள் அதிகம்  கூடும் இடங்கள் ரயில் நிலையம், பேருந்து நிலையம், அம்மா உணவகம், ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் தங்களது வாகனத்தில் குற்றங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்றும், ஆன்லைனில்  மோசடி பேர்வழிகள்  கூறும் அறிவிப்புகளை நம்பி ஏமாறாமல் உரிய முறையில் தங்களை தற்காத்துக் கொள்ளவும் விழிப்புணர் ஏற்படுத்தப்பட்டது.

  மேலும், பணத்தை இழந்தவர்கள் எவ்வாறு 24 மணி நேரத்தில் அதனை திரும்ப பெறுவது என்பது குறித்தும்,  காவல்துறை வங்கி உதவியை நாடுவது குறித்தும் “சேப்கார்ட் வித் google” என்ற ஹேஷ்டேக் மூலம் தங்களது பிரச்சார வாகனத்தில் இருந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆடியோ மற்றும் மக்களிடையே வீடியோ பதிவையும் வெளியிட்டு மக்களிடையே விழிப்புணர்வு செய்தனர்.

  இதையும் படிங்க : தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள்: வரைவு பட்டியலை வெளியிட்ட மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு

  மேலும் இக்குழுவினர் இணையதள மோசடி பேர்வழிகளிடம் எப்படி ஏமாறுகிறார்கள் மக்கள் என்பதையும், வங்கிகளில் இருந்து பேசுவது போன்று நடித்து காண்பித்து otp எண்களை பின் நம்பர்களை எப்படி பெற்று  ஏமாற்றி வருகின்றனர் என்பதை தத்துரூபமாக நடித்துக்காண்பித்தனர்.

  இதையும் படிங்க : கனமழையை எதிர்கொள்ள சென்னையில் முழு வீச்சில் ஏற்பாடுகள்.. தயார் நிலையில் 860 பம்புகள்

  இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதைப்பார்த்த பொதுமக்கள் குறிப்பாக ஆட்டோ ஓட்டுநர்கள், வழக்கறிஞர்கள், துப்புரவு தூய்மைgoogle பணியாளர்கள் இந்த விழிப்புணர்வு நாடகம் தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது என்றும், இதுகுறித்து இனிமேல் இணையதளம் மற்றும் இணையதளம் மோசடி பேர்வழிகள் ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் போலியான ஆப்ஸ்கள் வைத்து அதன் மூலம் மக்களை ஆசைவார்த்தை   கூறி  ஏமாற்றுவதை இந்த நாடகம் மூலம் நன்கு உணர்ந்ததாக தெரிவித்தனர்.

  ஆன்லைன் மோசடி குறித்து GOOGLE, நியூஸ் 18 நெட்வொர்க் விழிப்புணர்வு

  மேலும் அவர்கள் இதுகுறித்து தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்றும் உறுதி தெரிவித்தனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் நின்று கேட்ட சிலரிடம் நிகழ்ச்சி குறித்து கேள்வி எழுப்பி சரியான பதிலை தெரிவித்தவர்களுக்கு  google மற்றும் நியூஸ் 18 நெட்வொர்க் பெயர் பொறித்த டி-ஷர்ட்டுகள் மற்றும் தொப்பிகளை வழங்கி அணிவித்து  கௌரவித்தனர்.

  செய்தியாளர் : பார்த்தசாரதி

  Published by:Karthi K
  First published:

  Tags: Google