முகப்பு /செய்தி /திருவள்ளூர் / ஆவடியில் கலப்பட பெட்ரோல் விநியோகத்தால் பழுதடைந்த வாகனங்கள்.. பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்

ஆவடியில் கலப்பட பெட்ரோல் விநியோகத்தால் பழுதடைந்த வாகனங்கள்.. பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்

பெட்ரோலில் தண்ணீர் கலந்து விநியோகம்

பெட்ரோலில் தண்ணீர் கலந்து விநியோகம்

Avadi Petrol Bunk | பெட்ரோலுக்கான பணத்தை திருப்பி தரவும் வாகனங்கள் ஏதேனும் பழுது ஏற்பட்டால் சரி செய்து தருவதாகவும் பெட்ரோல் பங்க் நிர்வாகம் உறுதி அளித்தது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Avadi, India

ஆவடியில் பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து விநியோகம் கலப்பட பெட்ரோலால் 30க்கும் மேற்பட்ட வாகனம் பழுதடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் சரஸ்வதி நகரில் தனியார் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது.  இந்த பெட்ரோல் பங்கில் காலை 30க்கும்  மேற்ப்பட்டோர் பெட்ரோல் தங்களின் இரு சக்கர வாகனங்களுக்கு போட்டு சென்றபோது சிறிது தூரத்திலே வாகனங்கள் பழுதாகி நின்றுள்ளது .இதனால் வாகனத்தில் இருக்கக்கூடிய பெட்ரோலை எடுத்து சோதனை செய்துள்ளனர்.

அப்போது பெட்ரோலுடன் தண்ணீரும் கலந்து வந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சமயத்தில் சிலர் பிளாஸ்டிக் கேனில் பெட்ரோல் போடுமாறு தெரிவித்தனர். அப்போதும் பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து வருவது தெரிந்ததால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க் ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருமுல்லைவாயில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். மேலும் ஒரு பாட்டிலில் பெட்ரோலை பிடித்து சோதனை செய்து பார்த்தனர். அப்போது பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து வருவதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பெட்ரோல் நிலையத்தை  பூட்டுமாறு ஊழியர்களிடம் போலீசார் தெரிவித்தனர்.

கடந்த 3 மாதங்களாக பெட்ரோல் பங்க் மூடி இருந்த நிலையில் முறையான பராமரிப்பு மேற்கொள்ளாமல் இன்று காலை முதல் மீண்டும் திறக்கப்பட்டதால் பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீர் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் 30க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள்  பாதிப்படைந்துள்ளதாக பல வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

பெட்ரோலுக்கான பணத்தை திருப்பி தரவும் வாகனங்கள் ஏதேனும் பழுது ஏற்பட்டால் சரி செய்து தருவதாகவும் பெட்ரோல் பங்க் நிர்வாக சார்பில் திருமுல்லவாயில் போலீசார் முன்னிலையில் வாடிக்கையாளருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பங்கில் பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து வந்த சம்பவம் திருமுல்லைவாயலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: கன்னியப்பன் 

First published:

Tags: Avadi, Local News, Petrol