ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

திருவள்ளூர்: செல்போனை பறிமுதல் செய்த கல்லூரி.. மனமுடைந்து விபரீத முடிவெடுத்த மாணவர்!

திருவள்ளூர்: செல்போனை பறிமுதல் செய்த கல்லூரி.. மனமுடைந்து விபரீத முடிவெடுத்த மாணவர்!

உயிரிழந்த மாணவர்

உயிரிழந்த மாணவர்

Suicide | கல்லூரி நிர்வாகம் செல்போன் தராததால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu | Avadi

  ஆவடி ரயில்நிலையத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் ஓடும் ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரை மோனிஷ்(17), திருமுல்லைவாயிலில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல செமஸ்டர் தேர்வு எழுத  பாலிடெக்னிக் கல்லூரிக்கு வந்துள்ளார்.

  கடந்த வியாழக்கிழமை இவர் கல்லூரியின் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியதற்காக கல்லூரி நிர்வாகம் அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்துள்ளது.

  இன்று கல்லூரிக்கு சென்ற அவர் செல்போனை கேட்டு கல்லூரி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதில் அவர்கள் செல்போன் தர மறுத்ததால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், கல்லூரியில் இருந்து சுவர் ஏறி ஆவடி ரயில் நிலையம் சென்றுள்ளார்.

  ALSO READ | பிணவறையில் பெண் உடல்களை நிர்வாணமாக படம் எடுத்த ஊழியர்.. அதிர்ச்சி சம்பவம் அம்பலம்!

  அங்கு திருப்பதியிலிருந்து சென்னை செல்ல கூடிய சப்தகிரி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகத்தின் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.

  செய்தியாளர்: கண்ணியப்பன், ஆவடி.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Avadi, Suicide