Home /News /tiruvallur /

ஆவடி அருகே 9-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது

ஆவடி அருகே 9-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர்

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர்

Avadi | வெள்ளவேடு அருகே முள்ளு தோப்பில் வைத்து 9-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநரை நசரத்பேட்டை போலீசாரர் போக்சோ வழக்கில் கைது செய்தனர். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Avadi, India
    ஆவடி அடுத்த பட்டாபிராம் பாரதியார் நகர் பகுதியை சேர்ந்த தம்பதிகளுக்கு  இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களும் பட்டாபிராமில்  உள்ள  பள்ளி ஒன்றில் படித்து வருகின்றனர். இவரது மூத்த மகள் 9 ம் வகுப்பு படித்து வருகிறார். மூத்த மகளுக்கு பட்டாபிராமில் உள்ள பள்ளியில் படிக்க விருப்பம் இல்லாததால் கடந்த 10 தினங்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

    இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி, நேற்று மாலை  வீட்டின் படுக்கை அறையில் மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டார். கழுத்தில் சரியாக முடிச்சி விழாததால் தற்கொலை முயற்சி தோல்வியில் முடிந்தது.

    கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி பட்டாபிராம் IAF  சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத ஆட்டோ ஓட்டுநர் சிறுமியை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி, பின்னர் அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெள்ளவேடு பகுதியில் உள்ள தனியார் வாட்டர் கம்பெனி பின்புறம் உள்ள முள்ளு தோப்பில் அழைத்து சென்று  பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.

    சிறுமி அங்கிருந்து தப்பியோடி வந்துள்ளார். வழியில் ஒரு பெண், சிறுமியை மீட்டு வெள்ளவேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் பட்டாபிராம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தியதில் சிறுமியை, மர்ம நபர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
    அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சிறுமியை கடத்திச் சென்றது பட்டாபிராம் டீச்சர்ஸ் காலனி சேர்ந்த ராமகிருஷ்ணன் வ/38 என்பது தெரியவந்தது. பட்டாபிராம் போலீஸ் இவரை கைது செய்து நசரத்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் திருவள்ளூர் மகிளா நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    Also see...  கோவில்பட்டியில் பலத்த மழை... சுரங்கப்பாதையில் சிக்கிய பள்ளி வாகனம்... பத்திரமாக மீட்கப்பட்ட குழந்தைகள்...

    மேலும் சிறுமி ஏன் 10 நாட்ளாக பள்ளிக்கு போகாமல் இருந்துள்ளார்.?* தற்கொலைக்கு ஏன் முயற்சிசெய்தார்.?* வீட்டை விட்டு வெளியேற யார் காரணம்.?* என்கிற கோணத்தில் ஆவடி காவல் துணை ஆணையர் மகேஷ் IPS தலைமையில் 5 பேர் கொண்ட  தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    செய்தியாளர்: கண்னியப்பன், ஆவடி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Auto Driver, Avadi, Crime News, Pocso, Sexual abuse

    அடுத்த செய்தி