திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மாங்கல் சிப்காட் பகுதியில் காலணிகள் தயாரிக்கும் பிரபலமான தொழிற்சாலை உள்ளது. இங்கு தயாரிக்கப்பட்ட சுமார் ரூ.97 லட்சம் மதிப்பிலான 350 பெட்டிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஷூக்கள் அடக்கி வைக்கப்பட்டிருந்தது. சென்னை தம்புச்செட்டு தெரு மண்ணடி பகுதியில் இயங்கி வரும் லாஜிஸ்டிக் நிர்வாகம் மூலமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலை உயர்ந்த ஷூக்களை பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்பி வைப்பதற்காக கடந்த 11ம் தேதி இரவு தொழிற்சாலையில் இருந்து பேக்கிங் செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னை எர்ணாவூர் ஜோதி நகரை சேர்ந்த கண்டெய்னரில் காலணிகள் எடுத்துசெல்லப்பட்டன. இந்த கண்டெய்னரை ஓட்டுனர் ஐயப்பன் என்பவர் செய்யாறில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு ஓட்டி வந்தார். இதனிடையே, கண்டெய்னருடன் கூடிய ஜிபிஆர்எஸ் கருவியை ஊழியர்கள் ஆய்வு செய்து கொண்டிருந்தனர். இதனிடையே, கண்டெய்னர் சென்னை துறைமுகம் செல்லும் வழியில் வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 400 அடி வெளிவட்டச் சாலையின் அருகே சுமார் இரவு 11:15 மணியளவில் முதல் மறுநாள் காலை 7:30 மணி வரை சுமார் 8 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததை கண்காணிப்பு ஊழியர்கள் கண்டறிந்தனர்.
இதனால் துறைமுகத்திற்கு கண்டெய்னர் வராததால் உரிமையாளர்கள் இதுதொடர்பாக ஓட்டுனர் ஐயப்பனுக்கு தொடர்பு கொண்டனர். அப்போது அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கண்டெய்னர் லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஆர்எஸ் ஆய்வு செய்தபோது அந்த கண்டெய்னர் லாரி வெள்ளவேடு அடுத்த 400 அடி சர்வீஸ் சாலையில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து லாஜிஸ்டிக் மேனேஜர் பிரகாஷ், பூபதி மற்றும் ஈஸ்ட் விண்ட் புட்வேர் தொழிற்சாலையின் ஏஜிஎம் பாரதி செந்தில் நாதன் ஆகியோர் கண்டெய்னர் நிறுத்தியிருந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது அது பழைய பொருட்களை வாங்கி விற்கும் தனசேகர் என்பவருக்கு சொந்தமான இடம் என்பது தெரியவந்தது. மேலும் பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட ஷூக்கள் 230 அட்டை பெட்டிகள் கொண்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ளான ஷூக்கள் இறக்கி வைக்கப்பட்டு இருப்பதை பார்த்துள்ளனர்.
இதையடுத்து, அந்த அட்டை பெட்டியில் இறக்கி வைக்கப்பட்டிருந்த ஷூக்களை அங்கிருந்து வேறொரு லாரி மூலம் எடுத்து சென்றனர். இதுதொடர்பாக லாஜிஸ்டிக் உரிமையாளர் மணிகண்டன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வெள்ளைவேடு போலீசார் சோகி அப்துல்லா, இளயமாறன், தனசேகர் ஆகிய மூவரை கைது செய்தனர். மேலும், கண்டெய்னர் லாரி ஓட்டுனர் ஐயப்பன் மற்றும் பிரகாஷ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர். கண்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட விலை உயர்ந்த ஷூக்களை திரைப்பட பாணியில் கடத்தி விற்க முயன்ற நபர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
செய்தியாளர் : பார்த்தசாரதி - திருவள்ளூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Thiruvallur