Home /News /tiruvallur /

கிராமசபை கூட்டத்தில் வரவு செலவு கணக்கு கேட்டவர் மீது திமுக பெண் கவுன்சிலரின் கணவர் தாக்குதல்

கிராமசபை கூட்டத்தில் வரவு செலவு கணக்கு கேட்டவர் மீது திமுக பெண் கவுன்சிலரின் கணவர் தாக்குதல்

கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி

Thiruvallur | திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் இருவேறு ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பானதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கும்மிடிப்பூண்டி அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வரவு செலவு காட்டச் சொன்ன கிராம வார்டு உறுப்பினர் மீது திமுக  பெண் கவுன்சிலரின் கணவர் கிராம மக்கள் முன்னிலையில் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூவலம்பேடு கிராமத்தில் வரவு செலவு கணக்கு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேள்வி எழுப்பிய பொது மக்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாஜலபதி தலைமையிலான ஊராட்சி மன்ற நிர்வாகமும் அதிகாரிகளும் முறையான பதில் அளிக்க மறுத்தனர். அதனால் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுக ஒன்றிய கவுன்சிலர் பாசம் என்பவரின் கணவர் அன்பு மற்றும் உறவினர்கள் வார்டு உறுப்பினரை தாக்க முயற்சித்ததால் கைகலப்பு ஏற்பட்டது.

    அதேபோல் தேர்வழி ஊராட்சியில் ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பாக சரியான வரவு செலவு கணக்குகள் ஒப்படைக்கப்பட்ட நிலையிலும் அரசு ஆக்கிரமிப்புகளை அகற்ற பலமுறை தீர்மானம் போடப்பட்டும் அதிகாரிகளின் உத்தரவு கிடப்பில் கிடப்பதாக  கூறி 50க்கும் மேற்பட்ட பெண்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



    Also see... கும்பகோணம் மாநகராட்சியில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசிய கொடி...

    பின்னர் ஒரு சில தினங்களில் அதற்கான நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் கண்ணன் செல்போன் வாயிலாக தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவம்கள் காரணமாக இரு ஊராட்சிகளிலும் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    செய்தியாளர்: பார்த்தசாரதி, திருவள்ளூர்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Thiruvallur

    அடுத்த செய்தி