Home /News /tiruvallur /

விவாகரத்து ஆன ஆண்கள் டார்கெட்... பேரக் குழந்தைகளை பெற்ற ‘பாட்டி’, பியூட்டி வேஷம்போட்டு திருமண மோசடி

விவாகரத்து ஆன ஆண்கள் டார்கெட்... பேரக் குழந்தைகளை பெற்ற ‘பாட்டி’, பியூட்டி வேஷம்போட்டு திருமண மோசடி

திருமண மோசடி

திருமண மோசடி

பெண்பார்க்க ஆந்திராவுக்கு வருவதை அறிந்த 54 வயதான சுகுணா பியூட்டி பார்லர் சென்று முடியை ஸ்ரைட்டனிங் (HAIR STRAIGHTING) செய்து மேக்கப்  போட்டு  35 வயதான இளம் தோற்றத்துடன் மாப்பிள்ளை வீட்டார் முன் தோன்றியுள்ளார்.

    நகை பணம் மற்றும் சொத்துக்காக விவாகரத்தான ஆண்களை கல்யாண புரோக்கர் மூலம்  குறிவைத்து முதல் திருமணத்தை மறைத்து 2 திருமணங்களை செய்து மோசடியில் ஈடுபட்ட ஆந்திரா பெண்னை ஆவடி அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் புழல் சிறையில் அடைத்தனர்

    ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் இந்திராணி. இவரது மகன் கணேஷ் தனியார்  நிறுவன மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.  கணேஷுக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியிருந்தது. கடந்த 6 ஆண்டுகளாக மருமணத்திற்காக பெண் தேடி வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 2021 ம் ஆண்டு ஆந்திர மாநிலம் திருப்பதி புத்தூர் பகுதியை சேர்ந்த  சரண்யா என்பவர் திருமண புரோக்கர் மூலமாக ஏழை குடும்பம் என கூறி அறிமுகமும் ஆகியுள்ளார்.

    இந்திராணியின்  குடும்பத்தார் பெண்பார்க்க ஆந்திராவுக்கு வருவதை அறிந்த 54 வயதான அப்பெண் பியூட்டி பார்லர் சென்று முடியை (HAIR STRAIGHTING) செய்து மேக்கப்  போட்டு  35 வயதான இளம் தோற்றத்துடன் மாப்பிள்ளை வீட்டார் முன் தோன்றியுள்ளார். அவரது அழகில் மயங்கிய  மாப்பிள்ளை வீட்டிற்கு பெண்ணை பிடித்து போய் உள்ளது. பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் மாப்பிளை வீட்டாரின் செலவில்  திருநின்றவூரில் திருமணம் நடந்துள்ளது.

    இந்திராணியின்  மகன்  கணேஷ் மணமகளுக்கு தனது சொந்த செலவில் 25 சவரன் தங்கநகையை அளித்து திருமணமும் செய்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து திருமணம் முடிந்த சில நாட்களிலேயே சரண்யா இந்திராணி மகனிடம் மாத வருமானம் தன்னிடம் தான் கொடுக்க வேண்டும், வீட்டின் பீரோ சாவி தன்னிடம் கொடுக்க வேண்டும் என சொல்லி சண்டையிட்டுள்ளார். மேலும் தொடர்ந்து தினமும் கணவரிடம் அவரது பெயரில் உள்ள  சொத்துக்களை தனது பெயரில் எழுதி தர வேண்டுமென சரண்யா அடம்பிடித்துள்ளார்.

    இதையும் படிங்க: சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் 235 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கம்

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கும் முன்பு மாமியார் இந்திராணியை வீட்டை விட்டு துரத்தியுள்ளார்.இதனால் மனமுடைந்த கணவர் சொத்துகளை எழுதி வைக்க சரண்யாவிடம் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுள்ளார்.
    ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் தன்னிடம் இல்லை எனக்கூறி ஆதாரங்களை தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.ஒரு கட்டத்தில் சரண்யா தனது ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணத்தை அளித்துள்ளார்.



    அதில் C/O என்ற இடத்தில் ரவி என இருந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் கணவர் பெயரை கேர்/ஆப் என்பதை குறிப்பிடுவது வழக்கம். இதையடுத்து  சந்தேகம் அடைந்த இந்திராணி மற்றும் அவரது மகன் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் லதாவிடம் புகாரளித்துள்ளனர். இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் இது சம்பந்தமாக தீவிர விசாரணையை மேற்கொண்டார்.

    போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  அதன்படி, சரண்யாவின் உண்மையான பெயர் சுகுனா ஆகும். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுகுணா ரவி என்பவரை முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர் .மகள் இருவருக்கும் திருமணமாகி பேர் குழந்தைகளும்  உள்ளனர். இந்த நிலையில் சுகுணா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து  பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தனது தாயுடன் திருநின்றவூரில் வசித்து வந்துள்ளார்.

    மேலும் படிங்க: நள்ளிரவு முதலே களைகட்டிய காசிமேடு மீன் மார்க்கெட்

    தொடர்ந்து வருமானம் ஏதும் இல்லாத காரணத்தினால் சுகுணா  மற்றும் அவரது தாயார் சாந்தாம்மாள் இருவரும் அந்தப் பகுதியில் உள்ள சில திருமண புரோக்கர்கள் உதவியுடன் திருமண  ஏமாற்று வேலையில் ஈடுபட துவங்கியுள்ளனர். அப்பொழுது அவர்,  சென்னை ஆவடி அடுத்த முத்தாபுது பேட்டையை சேர்ந்த இந்திராணி அவரது மகனுடன் சரண்யா எனக்கூறி அறிமுகமாகி பழகியுள்ளார்.  தனக்கு ஏற்கனவே திருமணம் நடந்ததை மறைத்து இந்திராணி மகனை திருமணம் செய்து கொண்டு அவர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்தது தெரியவந்துள்ளது.

    இந்திராணி அளித்த  புகாரின் அடிப்படையில் ஜோலார்பேட்டை யில் பதுங்கியிருந்த சரண்யாவை ஆவடி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் லதா மற்றும் காவலர்கள் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில்  இதேபோல் ஜோலார்பேட்டையை சேர்ந்த ரயில்வே உணவு சப்ளை காண்டராக்டர் சுப்ரமணியன் என்பவரை புரோக்கர் உதவியுடன் சந்தியா என தொடர்பு ஏற்படுத்திகொண்டு
    கடந்த  11 ஆண்டுகளாக கணவன் மனைவியாக குடும்பம் நடத்தி வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.



    இவர்  சுப்பிரமணியுடன் சேலம் மாவட்டத்தில் சில காலம் தங்கி வந்துள்ளார்.  பின்னர் கொரோனா காலத்தில் தனது தாயைப் பார்க்க செல்வதாக கூறி சென்றவர் அத்துடன் சில தினங்களுக்கு முன்னர் வீட்டிற்கு வந்துள்ளார் இந்த இடைப்பட்ட காலத்தில் சுகுணா, சந்தியா,சரண்யா என பல பெயர்களை பயன்படுத்தி பல திருமணம்  செய்து கொண்டு அந்த ஆண்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதைகேட்டு  மகளிர் காவல் நிலையம்  அதிர்ந்தது. பின்னர் 11 வருடம் வாழ்ந்த கணவர்  சுப்ரமணியன் தனது மனைவியை காவல்துறையினர் கைது செய்து சிறை சிறைக்கு அனுப்பியது தெரியாது எனவும் சிறையில் இருந்து வெளியே வந்தால் அறிவுரைகள் கூறி தான் ஏற்றுக் கொள்ள இருப்பதாகவும் கூறினார். மேலும் தனக்கு வயதாகி விட்டதால் அவரைத் தவிர தனக்கு துணை யாரும் இல்லை எனவும் மிகுந்த வருத்தத்துடன் கூறினார் .

    சுகுனா தனது முதல் கணவரான ரவி மீது ஆந்திரா காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமை செய்தார் என புகார் அளித்து 10 லட்சம் பணம் சுருட்டியுள்ளார். இதே பாணியில் ஆவடியை சேர்ந்த இந்திராணி மகனான தனியார் நிறுவன மேலாளர் கணேஷ்  மீது  ஆந்திராவில் வரதட்சணை கொடுமை புகார் அளித்து பணத்தை ஏமாற்ற இருந்த நிலையில் ஆவடி அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதால் ஏமாற்று செயல் அம்பலமாகியது குறிப்பிடத்தக்கது.

    திருமணமாகி விவாகரத்து பெற்று மறுமணத்திற்கு காத்திருக்கும் ஆண்களை குறி வைத்து சொத்துக்களை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஆந்திராவை சேர்ந்த பலே கில்லாடி பெண் ஆவடி மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: கண்ணியப்பன் - ஆவடி
    Published by:Murugesh M
    First published:

    Tags: Andhra woman, Crime News, Marriage

    அடுத்த செய்தி