முகப்பு /செய்தி /திருவள்ளூர் / வீடு புகுந்து பெண் கவுன்சிலரை கடத்திய ஆந்திர கூலிப்படையினர் கைது... திருவள்ளூர் போலீஸ் அதிரடி

வீடு புகுந்து பெண் கவுன்சிலரை கடத்திய ஆந்திர கூலிப்படையினர் கைது... திருவள்ளூர் போலீஸ் அதிரடி

கடத்தப்பட்டவர்கள்

கடத்தப்பட்டவர்கள்

Crime News : கும்மிடிப்பூண்டி அதிமுக பெண் கவுன்சிலர் வீடு புகுந்து துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thiruvallur, India

திருவள்ளூர் மாவட்டம்‌ மாதர்பாக்கம் அருகே பல்லவாடா கிராமத்தில் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ரோஜா மற்றும் அவரது

மகன் ஜேக்கப் ஆகிய இருவர் கடந்த 24ம் தேதி துப்பாக்கி மற்றும் கத்தி முனையில் அவரது வீட்டிலிருந்து காரில் கடத்தி செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபாஸ் கல்யாண், கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியாசக்தி ஆகியோர் ஆடியோ விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டி டிஎஸ்பி ஜெகதீஷ் நாயக் உள்ளிட்ட காவல்துறையினரும் இந்த கடத்தல் சம்பந்தமாக நேரில் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இருவரையும் இன்னோவா காரில் கடத்திச்சென்றபோது ஆந்திர எல்லை ஆரூரில் வைத்து அதிமுக பெண் கவுன்சிலர் ரோஜாவின் உறவினர் பார்த்ததால் கடத்திச் சென்ற மர்ம நபர்கள் இருவரையும் ஆந்திர மாநிலம் காளகஸ்தி சாலையில் வரதயபாளையம் வரை செல்போன் சிக்னல் இருந்துள்ளதால் இருமாநில போலீசார் கூட்டாக விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக தனிப்படை போலீசாரும் விசாரித்து வந்தனர்.

அதன்படி கடத்தல்காரர்களின் செல்போன் சிக்னலை வைத்து காரை பின் தொடந்த போலீசார் ஆந்திர எல்லையில் சித்தவேடு அருகே இருவரையும் மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சுரேந்தர், சந்தோஷ், பாஸ்கர், நவீன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அதிமுக கவுன்சிலரின் கணவர் ரமேஷ்குமாரின் விவசாய நிலம் அருகில் விவசாய நிலம் வைத்திருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுரேந்தர் என்பவருக்கும் நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆந்திர மாநில கூலிப்படை உதவியுடன் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, கைதானவர்களிடம் இருந்து துப்பாக்கி, 2 கத்திகள், 8 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார் தலைமறைவான மேலும் சிலரை தேடி வருகின்றனர். முன்விரோத தகராறில் பெண் உட்பட இருவரை கூலிப்படையினர் மூலம் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர் : பார்த்தசாரதி - திருவள்ளூர்

First published:

Tags: Crime News, Thiruvallur