Home /News /tiruvallur /

ஆவடி: விமானப்படை வீரர் மன உளைச்சலால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

ஆவடி: விமானப்படை வீரர் மன உளைச்சலால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

தற்கொலை செய்துக் கொண்ட விமான படை வீரர்

தற்கொலை செய்துக் கொண்ட விமான படை வீரர்

Avadi | ஆவடி விமானப்படை நுழை வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த 22 வயது உதவி விமான படை வீரர் மன உளைச்சலால் கையில் வைத்திருந்த இன்சாஸ் ரக் AK47 துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவர் ஹிந்தியில் எழுதிய 3 பக்க உருக்கமான கடிதம் ஆவடி காவல் துறையின் வசம் சிக்கியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Avadi, India
    ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் இந்திய விமானப்படை பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு வீரர்களுக்கு டெக்னீசியன் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இங்கு ஆண்டுக்கு இரு முறை பயிற்சி முடித்த வீரர்களை இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இங்கு குஜராத் மாநிலம், கொடிநூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான நீரோவ் சௌஹான் என்ற வீரர், Assistant air craft man பதவியில் கடந்த 2021 ஆண்டு பணிக்கு சேர்ந்துள்ளார். இவருக்கு 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை பாதுகாப்பு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், புதன்கிழமை நீரோவ் செளஹான் ஆவடி இந்திய விமானப்படை அலுவலகத்தின் முன் பகுதியில் AK47 ரக துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரிடம் இருந்த'Insas' வகை AK47 துப்பாக்கியால் வலது பக்க தொண்டை பகுதியில் வைத்து திடீரென தன்னை தானே சுட்டுக்கொண்டார்.

    வீரர் நீரோவ் சௌஹான் வைத்திருந்த துப்பாக்கியில் மொத்தம் 20 குண்டுகள் இருந்துள்ளது. அதில் ஒரு முறை அழுத்தினால் 3 குண்டுகள் ஒரே நேரத்தில் வெளிவர கூடிய பட்டனை அவர் அழுத்தியதால் ஒரே நேரத்தில் 3 குண்டுகள் அவரது தொண்டையை துளைத்து கொண்டு பின்தலை வழியாக தோட்டா வெளியேறியதில் மூளைச்சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உரிழந்தார். இதனைத் தொடர்ந்து விமானப்படை அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், இந்த சம்பவம் குறித்து விமான படை அதிகாரிகள் முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த முத்தாபுதுப்பேட்டை காவல் துறையினர், நீரோவ் சௌஹான் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகார் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ஜெய்கிருஷ்ணன் தலைமையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விமானப் படை வீரர் நீரோவ் சௌஹான் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவிட்டு நேரடியாக விமானப்படையில் சேர்ந்ததாகவும் அதற்கு பிறகு UG டிகிரியை ஆன்லைன் மூலம் பயின்று வருவதாகவும். மேலும் தற்கொலைக்கு காரணம் குடும்பப் பிரச்சனையா? அல்லது பணியில் ஏற்பட்ட மன அழுத்தமா? என தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Also see... பள்ளி வகுப்பில் ஆபாசமாக பாடம் நடத்திய ஆசிரியர் போக்ஸோவில் கைது

    ஆவடியில் மத்திய ராணுவத்திற்கு சொந்தமான பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில் வீரர்களுக்கு உயரதிகாரிகள் தொடர் அழுத்தம் கொடுப்பதால் அவ்வப்போது வீரர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகியுள்ளது. ஒரு சில வருடங்களுக்கு முன்னர் இதேபோன்று பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர், சக வீரரை துப்பாக்கியால் சுட்டு கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: கண்ணியப்பன், ஆவடி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Air force, Avadi, Commit suicide, Crime News, Gun shoot, Thiruvallur

    அடுத்த செய்தி