ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்! - பொன்னேரி அருகே பெரும் பரபரப்பு

அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்! - பொன்னேரி அருகே பெரும் பரபரப்பு

சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலை

சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலை

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் முதற்கட்டமாக துணியை கொண்டு சிலையை மூடினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ponneri, India

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே, அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக 2 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த நெடுவரம்பாக்கம் கிராமத்தில் டாக்டர் அம்பேத்கரின் முழு உருவ சிலை உள்ளது. அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு இங்கு இந்த முழு உருவ சிலை நிறுவப்பட்டிருந்தது. இந்த சிலை பாதுகாப்பு வேலியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை கிராம மக்கள் பார்த்தபோது அம்பேத்கரின் சிலை சேதப்படுத்தப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அம்பேத்கரின் சிலையில் முகத்தையும், கையையும் சேதப்படுத்தியிருந்தனர். மேலும் தோள்பட்டையுடன் இணையும் பகுதியில் கையை உடைக்க முயற்சித்துள்ளனர். இதனை அறிந்த கிராம மக்கள் சிலை அருகே திரண்டனர். இதுகுறித்து காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினருக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் முதற்கட்டமாக துணியை கொண்டு சிலையை மூடினர். இந்த சம்பவம் தொடர்பாக கிராமத்தில் உள்ள இளைஞர்கள் இருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வருவாய்த்துறையுடன் இணைந்து சேதப்படுத்தப்பட்ட அண்ணலின் சிலை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்தனர்.

First published:

Tags: Ambedkar, Statue, Tamilnadu