ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

விளம்பர நடிகையை வீட்டுக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை.. ஆட்டோ ஓட்டுநர் கைது!

விளம்பர நடிகையை வீட்டுக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை.. ஆட்டோ ஓட்டுநர் கைது!

மாதிரி படம்

மாதிரி படம்

Chennai abuse | ஆட்டோ ஓட்டுநருடன் ஏற்பட்ட பழக்கத்தால் அவரது வீட்டிற்கு சென்ற விளம்பர நடிகைக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai

விளம்பர நடிகையை வீட்டிற்கு அழைத்துச் சென்று நண்பர்களுடன் கூட்டாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநர்  உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் அடுத்த சீயஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் விஜய். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும் காக்களுர் பைபாஸ் சாலையில் வசிக்கும் நகைக்கடை துணிக்கடை உள்ளிட்ட சிறு சிறு உள்ளூர் விளம்பரங்களுக்கு நடிக்கும் 26 வயது திருமணமான நடிகைக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஆட்டோ ஓட்டுனர் புத்தாண்டு தினத்தில், விஜய் விளம்பரம் மாடல் நடிகையை சீயஞ்சேரியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே விஜய் வீட்டில் இருந்த சாம்ராஜ், சதீஷ் ஆகிய நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனால் பாதிப்படைந்த விளம்பர மாடல் நடிகை புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். தொடர்ந்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார்,  கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர் விஜய், சாம்ராஜ் , சதீஷ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர்: பார்த்தசாரதி, திருவள்ளூர்.

First published:

Tags: Crime News, Sexual abuse, Thiruvallur