Home /News /tiruvallur /

திமுகவின் 10 எம்.எல்.ஏக்கள் அதிமுகவுடன் பேசி வருகின்றனர் - இபிஎஸ் பரபரப்பு தகவல்

திமுகவின் 10 எம்.எல்.ஏக்கள் அதிமுகவுடன் பேசி வருகின்றனர் - இபிஎஸ் பரபரப்பு தகவல்

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

பாசமுள்ள அதிமுக கட்சி, அன்போடு அழைத்ததால் தான் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன் என்றும், தொண்டராக கலந்து கொண்டேன் எனவும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Gummidipoondi
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிதிமுக ஒரு குடும்ப கட்சி, கார்ப்பரேட் கட்சி. எந்த ஒரு பதவியிலும் இல்லாத எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் தான், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளை தொடங்கி வைப்பதாக சாடினார். ஆனால், அ.தி.மு.க தொண்டர்கள் ஆளுகின்ற கட்சி. தொண்டர்கள் தான் இப்போது அ.தி.மு.க-வை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். தொண்டர்களால் நடத்தப்படும் அ.தி.மு.க-வில் தலைவர்களுக்கு இடமில்லை. தினகரன், சசிகலாவுக்கு இடமில்லை என்று ஏற்கெனவே சொல்லிவிட்டேன். நானும் தொண்டன் என்ற முறையில்தான் இங்கு வந்திருக்கிறேன். தலைவர் என்ற முறையில் வரவில்லை என கூறியுள்ளார்.

மேலும், திமுகவின் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னோடு பேசி வருகின்றனர். ராகுல் காந்தி அவருடைய கட்சியை வளர்ப்பதற்காக நடை பயணம் செய்கிறார். பசியும் பட்டினியமாக உள்ள ஏழைகளுக்காக அம்மா உணவகம் ஏற்படுத்தப்பட்டது. அதனை மூடியவர்களுக்கு அடுத்த தேர்தலில் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். கொசஸ்த்தலை ஆற்றில் ஆந்திரா அரசு தடுப்பணை கட்டுவது கண்டிக்கத்தக்கது. அணை கட்டுவதை அரசு தடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ALSO READ | அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை... ஜூலை 11 நிகழ்ந்த மோதல் தொடர்பாக ஆய்வு

அதிமுக அலுவலகத்தில் திருடு போன சம்பவம் தொடர்பாக தற்போது சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், காலம் தாழ்ந்த விசாரணை என்றும்
நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு கிடையாது அதற்குரிய நடவடிக்கை எடுக்கின்ற முதலமைச்சரும் தமிழகத்தில் கிடையாது எனவும் சாடினார்.

நீதிமன்றத்திற்கு சென்ற பின்பு தான் சிபிசிஐடி விசாரணை மேற்கொள்கின்றனர். காவல்துறையினரின் மெத்தன போக்கு காரணமாக சிபிசிஐடி விசாரணை வந்துள்ளது. திமுக அரசு சட்ட ஒழுங்கு சீர்கேட்டிற்கு  சான்று அதிமுக அலுவலகத்தில் திருடு போனது குறித்து புகார் அளித்தும் விசாரணை முறையாக நடைபெறவில்லை. மக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
Published by:Anupriyam K
First published:

Tags: ADMK, Cm edapadi palanisami, EPS

அடுத்த செய்தி