ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கிய விஜய்..!

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கிய விஜய்..!

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முயன்ற பெண்ணுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் ரூ.50,000 நிதியுதவி வழங்கினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான திருவள்ளூரைச் சேர்ந்த இளம்பெண்னுக்கு நடிகர் விஜய் சார்பில் ரூ.50,000 உதவித்தொகை வழங்கப்பட்டது. 2022 செப்டம்பர் 29ஆம் தேதி அன்று 16 வயது மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். அந்த மாணவியை நான்கு பேர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர். அதைத் தொடர்ந்து மன உளைச்சளுக்கு ஆளான அந்த மாணவி தனது உடலுக்கு தீவைத்து தற்கொலைக்கு முயன்றார்.

அவரை குடும்பத்தார் 40 சதவீத தீக்காயங்களுடன் மீட்டு சிகிச்சை அளித்தனர். அதைத்தொடர்ந்து பாதிப்புக்கு ஆளான மாணவியின் வாக்குமூலத்தின் பேரின் 4 பேரை திருவள்ளூர் காவல்துறை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது. இந்நிலையில், தனக்கு உதவி செய்யுமாறு பாதிக்கப்பட்ட மாணவி நடிகர் விஜய்யிடம் கோரிக்கை வைத்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.

இது சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், முதலில் நடிகர் விஜய் தரப்பில் இருந்து பதில் ஏதும் வரவில்லை. விஜய் உதவி செய்யவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவி செய்யுமாறு விஜய் மக்கள் இயக்கத்தினரிடம் நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். அதன்பேரில் திருவள்ளூரில் உள்ள பாதிக்கப்பட்ட மாணவியின் வீட்டிற்கு சென்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ரூ.50,000 உதவித்தொகை வழங்கினர்.

இதையும் படிங்க: தொடர்ந்து 7 வெற்றிப் படங்கள் தந்து சாதனைப் படைத்த டி.ராஜேந்தர்

மேலும், அந்த பெண்ணுக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக அவர் உறுதி அளித்துள்ளனர். நடிகர் விஜயின் அறிவுறுத்தலின் பேரில் இந்த உதவித்தொகையை வழங்கியதாக கூறிய மக்கள் இயக்கத்தினர், நடிகர் விஜய் விரைவில் சந்திப்பார் என உறுதியளித்தனர்.

First published:

Tags: Actor Vijay, Sexual abuse, Sexually harassed women, Vijay makkal iyakkam