ஆவின் பால் பாக்கெட்களில் அளவு குறைந்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் வைத்த நிலையில், பொய் கூறுவதையே தொழிலாக வைத்துள்ளதாக அண்ணாமலையை பால் வளத்துறை அமைச்சர் நாசர் விமர்சித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பேருந்து பணிமனையிலிருந்து ஆவடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக ஆவடி அம்பத்தூர், திருமங்கலம், மதுரவாயல் வழியாக திருநெல்வேலி தூத்துக்குடிக்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் புதிய வழித்தடத்தில் 2 மிதவைப் பேருந்து சேவையை தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அ
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “
தவறான கருத்துக்களை கூறி தன்னை முன்நிலைபடுத்திகொள்ள வேண்டும் என ஒரு சில zero தலைவர்கள் அரசியல் தலைவர்கள் என்ற போர்வையில் தங்களுடைய கருத்துகளை கூறி வருகின்றனர்.
ஆவின் பொருத்தவரை 430 ml பால் உள்ளதாக கூறுகின்றனர். அதன் உண்மையான அளவு 500ml கிடையாது 517 கிராம் எடையுடன் இருக்க வேண்டும். அதை பேக்கிங் செய்துள்ள பாலித்தீன் கவரோடு சேர்த்து பேக்கிங் செய்யப்படும் பால் பாக்கெட்டுகள் 3 விதமான ஆய்வுகள் அதாவது உணவு பாதுகாப்பு துறை, தர கட்டுப்பாட்டு பரிசோதனை மற்றும் ஆவின் தொழிற்சாலை பொறியாளர்கள் என 1 மணி நேரத்திற்கு 1 முறை தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. பிறகு 1 கோடி சந்தாதாரர்களை கொண்ட ஆவின் நிர்வாகத்தில் 65 லட்சம் பாக்கெட் களை நாள் ஒன்றுக்கு பேக்கிங் செய்து அனுப்பப்படுகிறது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கீழ்த்தரமான செயல்.. ஓ.பன்னீர்செல்வத்துக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
மேலும், ஆவினில் தயாரிக்காத சத்து மாவு ஊழல் நடந்ததாக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் எல்லாம் முன் வைத்தனர். அண்ணாமலை நாளொரு வண்ணம் பொழுதுறு மேனியுமாக பொய் கூறுவதையே தொழிலாக வைத்துள்ளார் என விமர்சித்தார். திருப்பதி திருமலைக்கு கூடிய விரைவில் பேக்கேஜ் அடிப்படையில் ஆவடியிலிருந்து நேரடியாக பேருந்து வசதி மிக விரைவில் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும வர் குறிப்பிட்டார்.
பால் ஏற்றி வரும் வாகனங்களை சுத்தம் செய்ய RO வாட்டர் பயன்படுவதாகவும் அதுபோன்ற 25 RO பிளான்ட்டுகள் நாளொன்றுக்கு 2 மணி நேரம் மட்டுமே வேலை செய்து வருவதாகவும். அந்த RO தொழிற்சாலையில் விரைவில் தயாரிக்கவுள்ள ஆவின் குடிநீர் அனைத்து பொதுமக்கள் கூடும் இடங்களிலும் ஆவின் மையம் மூலம் விரைவில் விற்பனை செய்யப்படும் என கூறினார்.
செய்தியாளர்: கண்ணியப்பன் - அம்பத்தூர்
உங்கள் நகரத்திலிருந்து(திருவள்ளூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.