Home /News /tiruvallur /

போதையில் ஆள் மாறி கொலை... வெள்ளை டீ-ஷர்ட் அடையாளத்தால் அப்பாவி இளைஞர் பலியான சோகம்!

போதையில் ஆள் மாறி கொலை... வெள்ளை டீ-ஷர்ட் அடையாளத்தால் அப்பாவி இளைஞர் பலியான சோகம்!

வெள்ளை சட்டை போட்டவர் தான் மோகன்ராஜ் என ஸ்கெட்ச் போட்ட கஞ்சா கும்பல் அப்பாவி இளைஞர் ராபினை கொடூரமாக கொலை செய்தது.

வெள்ளை சட்டை போட்டவர் தான் மோகன்ராஜ் என ஸ்கெட்ச் போட்ட கஞ்சா கும்பல் அப்பாவி இளைஞர் ராபினை கொடூரமாக கொலை செய்தது.

வெள்ளை சட்டை போட்டவர் தான் மோகன்ராஜ் என ஸ்கெட்ச் போட்ட கஞ்சா கும்பல் அப்பாவி இளைஞர் ராபினை கொடூரமாக கொலை செய்தது.

  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
முன்விரோதம் காரணமாக கொலை செய்ய சென்ற 4 பேர் கொண்ட கும்பல், கஞ்சா போதையில் ஆள் மாறி ஊத்துக்கோட்டையை சேர்ந்த அப்பாவி இளைஞரை கொடூரமாக கொலை செய்தது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த ராபின் என்ற இளைஞரை நள்ளிரவில் கஞ்சா போதையில் ஆள் தெரியாமல் 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது.  முன் விரோதம் காரணமாக மோகன்ராஜ் என்ற கஞ்சா விற்பனை செய்யும் நபரை வெட்டுவதற்கு பதிலாக ஆள் மாறி ராபின் என்ற அப்பாவி இளைஞரை கொடூரமாக வெட்டி சாய்த்துள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் மிதந்த ராபின்,  ஏன் வெட்டுகிறார்கள் என தெரியாமலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும், ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில் 5 தனிப்படை அமைத்து கொலை செய்தவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் சோழவரத்தைச் சேர்ந்த கார்த்திக் (25), காரனோட பகுதியை சேர்ந்த மதுரை சரவணன் (25), பாடியநல்லூர் ஜோதி நகர் பகுதியை சேர்ந்த ராகுல் (26) ஆகிய மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் ஒரு முக்கிய குற்றவாளியை போலீசார் தனிப்படை அமைத்து வலை வீசி தேடி வருகின்றனர்.

ALSO READ | பாலியல் தேவைக்காக அரங்கேறிய கொலை - நடந்தது என்ன? பகீர் வாக்குமூலம்!

கைது செய்யப்பட்ட மூவரிடம் மேற்கொண்ட விசாரணையில்,  சோழவரம் பகுதியில் இரண்டு கேங்க் லீடர்களாக செயல்பட்டு வரும் சேதுபதி, முத்து சரவணன் தரப்பினர் கஞ்சா விற்பது, மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று அடிதடி, வழிப்பறி, கொலை, கொள்ளைகளில் ஈடுபடுவது என தங்களது திட்டங்களை நிறைவேற்றி வந்து கொண்டிருந்ததாகவும், இதில் யார் பெரிய ஆள் என்ற போட்டி வேறு இருந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த 14 நாட்களுக்கு முன் சேதுபதி தரப்பை சேர்ந்த கல்லூரி மாணவர் கானா பாடகரான ஸ்டார் அபி(23) என்பவர் தன்னுடைய வேலைகள் அனைத்தையும் youtube இல் லைவாக பதிவேற்றி அதை ரிவ்யூவும் செய்து வந்த நிலையில் உறவினர்களுடன் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்றார். அப்போது அவர் மரக்காணம் அருகே உள்ள கைப்பாணி என்ற இடத்தில் நடைபயணம் சென்று கொண்டிருந்தபோதே இரு சக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பலால் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

அபிஷேக் கொலை சம்பவத்திற்கு  பழி தீர்க்கும் விதமாக முத்து சரவணன் தரப்பில் உள்ள சோழவரம் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜை கொலை செய்வதற்காக ஸ்கெட்ச் போடப்பட்டுள்ளது.வெள்ளை டி-ஷர்ட் அணிந்திருப்பவர் தான், மோகன் ராஜ் என நினைத்து வெட்ட திட்டம் தீட்டியுள்ளனர். ஆனால், வெள்ளை டி ஷர்ட்டில் ராபின் என்ற இளைஞர் இருந்ததால், ஆள் மாறி, அப்பாவி இளைஞரான ராபினை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
Published by:Anupriyam K
First published:

Tags: Arrest, Murder, Murder case

அடுத்த செய்தி