வழக்கமாக பிரியாணி கடை ஆரம்பிப்பவர்கள் அதனை பிரபலப்படுத்தும் நோக்கில் கடை திறக்கும் நாளன்று 5 பைசாவுக்கு பிரியாணி வழங்கப்படும், ஆஃபர் உள்ளிட்ட வித்தியாசமான அறிவிப்புகளை வெளியிடுவர். அங்கு கூட்டம் அலைமோதும். ஆனால் இங்கு ஒரு பிரியாணி கடை திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
திருவள்ளுவர் தினத்தை சிறப்பிக்கும் வகையில், திருவள்ளூர் அருகில் உள்ள மணவாள நகரில் உள்ள பிரியாணி கடை சார்பில், திருக்குறள் போட்டி நடத்தப்பட்டது. விதியை ஏற்று, பலர் போட்டியில் கலந்துகொண்டனர். பிழையின்றி திருக்குறள்களை கூறி அசத்திய சிறுவர் சிறுமியருக்கு பிரியாணிக்கான டோக்கன் உடனடியாக வழங்கப்பட்டது. எதிர்பார்த்ததை விட ஏராளமானோர் போட்டியில் பங்கேற்று வென்றதால், சிலருக்கு இரவு நேரத்திற்கு டோக்கன் வழங்கப்பட்டது.செல்போன் விளையாட்டுகளில் நேரத்தை செலவழிக்கும் சிறுவர் சிறுமியர்களின் கவனத்தை திருப்பவே இந்த முயற்சி என்றும், இதற்கு நல்ல பயன் கிடைத்துள்ளதாகவும் கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Biryani, Thirukkural, Thiruvalluvar Day