முகப்பு /செய்தி /திருவள்ளூர் / 16 வயது மாணவியை கர்ப்பமாக்கிய 63 வயது முதியவர் - அபார்ஷன் செய்ய வத்தபோது அம்பலமான அதிர்ச்சி தகவல்

16 வயது மாணவியை கர்ப்பமாக்கிய 63 வயது முதியவர் - அபார்ஷன் செய்ய வத்தபோது அம்பலமான அதிர்ச்சி தகவல்

கைது செய்யப்பட்ட முதியவர்

கைது செய்யப்பட்ட முதியவர்

Thiruvallur : திருவள்ளூரில் 2 மனைவி மகளுடன் வசித்து வரும் 63 வயதான முதியவர் ஒருவர், 16 வயதுடைய பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thiruvallur (Tiruvallur)

16 வயதுடைய பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய 63 வயது முதியவரை ஆவடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

திருவள்ளூர் அடுத்த குக்கிராமத்தில்  வசிப்பவர் ராஜா (45) இவர் கட்டிட கூலி வேலை செய்து வருகிறார். இவரது 16 வயது மகள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், மாணவி 3 மாத கர்ப்பமாக இருந்ததை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து, திருவள்ளூரில் உள்ள  அரசு மருத்துவமனைக்கு மாணவியை அழைத்துச் சென்ற பெற்றோர், அங்கே மாணவியின் கர்ப்பத்தை கலைக்க முயன்றனர். இது

குறித்து மருத்துவமனையில் இருந்த ஆவடி மகளிர் காவல் ஆய்வாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதனைத் தொடர்ந்து அந்த இடத்துக்கு விரைந்து சென்ற மகளிர் காவல் ஆய்வாளர் லதா, விசாரணை செய்ததில், அதே பகுதியைச் சேர்ந்த 63 வயதான முதியவர் பலராமன் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

Must Read : தனியார் பள்ளியில் இருந்து எடுத்து சென்ற பொருட்களை ஒப்படையுங்கள் - தண்டோரா போட்டு எச்சரிக்கை

கூலி வேலை செய்துவரும் பலராமனுக்கு ஏற்கெனவே, 2  திருமணம் முடிந்து 2 மகள் உள்ளனர். கடந்த 3 மாதத்திற்கு முன்னர் முதியவர் பலராமன் மாணவியின் வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்று அங்கே பாலியல் பலாத்காரம் செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, காமுகன் பலராமனை கைது செய்த போலீசார் திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர் - கன்னியப்பன்.

First published:

Tags: POCSO case, Pregnant, Sexual harrasment, Thiruvallur