திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள முஸ்லிம் நகர் பகுதியில் வசிப்பவர் சதாம் உசேன். இவர் ஒரு கூலி தொழிலாளி. இவரது மனைவி சமிம். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடைசி குழந்தையான ஆண் குழந்தை முகமது சோபியா வயது(2).
வீட்டில் டி.வி- பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று 2- வயது குழந்தை முகமது சோபியா மீது டி.வி. விழுந்துள்ளது. காயம் அடைந்த குழந்தையை உறவினர்கள் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பணியிலிருந்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து குழந்தையை பரிசோதனை செய்து பார்த்தனர்.
அப்போது குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். உடனடியாக குழந்தையின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் குழந்தையை கொடுத்து விடுங்கள் என்று மருத்துவர்கள் இடமும் மருத்துவமனை ஊழியர்களிடமும் விவாதம் செய்தனர்.
ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் பிரேத பரிசோதனைக்காக குழந்தையை எடுத்துச் செல்வோம் என்று கூறியுள்ளனர். குழந்தையின் உறவினர்கள் அதனை ஏற்காமல் மருத்துவமனையில் கூச்சல், குழப்பத்துடன் பிரச்சனை செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த திருத்தணி போலீசார் பிரச்சனை செய்த குழந்தையின் உறவினர்களை சமாதானம் செய்தனர். பின்னர் பிரேத பரிசோதனை திருத்தணி மருத்துவமனையில் வைத்து செய்த பிறகுதான் குழந்தையின் உடலை தர முடியும் என்று கூறி சமரசம் செய்தனர்.
Also see... ஹாஸ்டலுக்கு செல்ல கட்டாயப்படுத்திய தாயை கொன்ற பள்ளி மாணவன்!
குழந்தை இறந்தது குறித்து ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கிராமிய காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: சசிக்குமார், திருத்தணி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Boy baby, Dead, Thiruvallur, Tiruttani Constituency