Home /News /tiruvallur /

சென்னை அருகே காரில் சென்ற பெண் கூட்டு பலாத்காரம்.. 6 பேர் கைது

சென்னை அருகே காரில் சென்ற பெண் கூட்டு பலாத்காரம்.. 6 பேர் கைது

இளம் பெண் பாலியல் புகார்

இளம் பெண் பாலியல் புகார்

Porur | போரூர் அருகே காரில் சென்ற பெண்ணை கத்தி முனையில் கூட்டு பலாத்காரம் செய்து நகை பறித்து சென்ற நான்கு பேரை போலீசார்  கைது செய்தனர்,

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Porur, India
    சென்னை அடுத்த போரூர் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் நேற்று முன் தினம் இரவு காரில் சென்று கொண்டிருந்தார். போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல், அருகே சென்று கொண்டிருந்த போது காரை வழி மறித்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி டிரைவரை தாக்கி விரட்டி விட்டு காரில் அமர்ந்திருந்த பெண்ணை காரோடு கடத்தி சென்றனர்.

    பின்னர் அங்கிருந்த காலி இடத்தில் வைத்து அந்த பெண்ணை கத்தி முனையில் கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணிடம் இருந்த 8 பவுன் நகையை பறித்து கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்நிலையில் பெண்ணை கத்தி முனையில் கூட்டு பலாத்காரம் செய்து நகை பறித்து சென்ற சம்பவத்தில் போலீசார் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.  கஞ்சா போதையில்  அவர்கள் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    Also see... கொடைக்கானல்:தூண்பாறையை மறைத்து கட்டப்பட்ட சுவரை இடிக்கும் பணி துவக்கம்



    கொளுத்துவான்சேரி பகுதியில் கஞ்சா விற்பனை அட்டகாசம் அதிகரித்துள்ளதால் இரு தரப்பினரிடையே கஞ்சா விற்பனை செய்வதில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருவதாகவும் இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வரும் நிலையில் கஞ்சா போதையில் இதுபோன்ற வழிப்பறி மற்றும் கூட்டு பலாத்கார சம்பவத்தில் மர்ம நபர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.

    செய்தியாளர்: சோமசுந்திரம், பூந்தமல்லி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Arrested, Gang rape, Porur

    அடுத்த செய்தி