ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

ஏம்பா இப்படி பிரச்னை பண்றீங்க.. பஞ்சாயத்து பேச வந்த இடத்தில் கத்திக்குத்து - திருவள்ளூரில் பதற்றம்

ஏம்பா இப்படி பிரச்னை பண்றீங்க.. பஞ்சாயத்து பேச வந்த இடத்தில் கத்திக்குத்து - திருவள்ளூரில் பதற்றம்

மருத்துவமனை

மருத்துவமனை

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே முன் விரோதத்தில் சண்டையிட்டவர்களிடம் சமரசம் செய்ய சென்ற பொதுமக்கள் நான்கு பேருக்கு கத்திக்குத்து. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கத்திக்குத்தில் தொடர்புடைய 4 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thiruvallur, India

  திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே உள்ள அரிச்சந்திராபுரம் பீம் நகர் பகுதியில் வசிப்பவர் சப்ஜாணி மகன் அஜ்மல் (23).  இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ரஹ்மான் (40) மற்றும் அவரது மகன்களான  அதவுல்லா(23), பாட்ஷா(35), அஸ்ரப்பள்ளி(27)ஆகியோருக்கும்  இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இது சம்பந்தமாக கடந்த சில மாதங்கள் முன்பு  ஊர் பெரியவர்கள் முன்னிலையில் இருதரப்பினரிடையே சமரசம் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

  இந்நிலையில் நேற்று விடியற்காலை 4 மணி அளவில் அஜ்மல் வீட்டிற்கு வெளியில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை  அதவுல்லா, அஸ்ரப்பள்ளி ஆகியோர் சேர்ந்து தீயிட்டு எரித்துள்ளனர். இது குறித்து திருவாலங்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை சம்பந்தமாக  நேற்று மாலை ஊர் பெரியவர்கள் 60 பேர் முன்னிலையில் இருதரப்பினரையும் அழைத்து  பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

  அப்போது ஆத்திரம் அடைந்த ரஹிமான் மற்றும் அவரது மகன்கள் மூன்று பேரும் சேர்ந்து கூட்டத்தில் நின்று கொண்டிருந்த அஜ்மல்(23), மஸ்தான்(30), படாபா(27), அமீது(58) ஆகிய நான்கு பேரையும் பட்டா கத்தியால் குத்தி உள்ளனர். தடுக்க வந்த பொது மக்களையும் கத்தியால் குத்த  முயற்சி செய்துள்ளனர். கத்தியால் குத்துப்பட்ட நான்கு பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாலங்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நான்கு பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

  Also see... சென்னை புறநகர் பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை...!

  இச்சம்பவத்தால் திருவலாங்காடு மருத்துவமனையில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடியதால் பதற்றம் ஏற்பட்டது.

  கத்திக்குத்து  சம்பவத்தில் ஈடுபட்ட ரஹிமான் , அதவுல்லா, பாட்ஷா , அஸ்ரப்பள்ளி ஆகிய நான்கு பேரும்  திருவலாங்காடு காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த திருவலாங்காடு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

  செய்தியாளர்: சசிக்குமார்( திருவள்ளூர்)

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Crime News, Police station, Thiruvallur