கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த அக்டேபர் 23ம் தேதி கார் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. இதில் ஜமேஷா முபின்(28) என்பவர் பலியானார். இதையடுத்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு சிறப்பு போலீசார் விசாரிக்க தொடங்கிய நிலையில் இந்த வழக்கு தொடர்பாக முகமது அசாரூதீன்(23), அப்சர்கான்(28), முகமது தல்கா(25), முகமது ரியாஸ்(27), பெரோஸ் இஸ்மாயில்(26), முகமது நவாஸ் இஸ்மாயில்(27) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
6 பேரையும் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் 6 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் சோதனையில் கிடைக்க பெற்ற ஆவணங்களை வைத்து இந்த வழக்கில் மேலும் 3 பேரை தேசிய புலனாய்வு சிறப்புபோலீசார் நேற்று கைது செய்தனர்.
கோவை போத்தனூரை சேர்ந்த முகமது தவ்பிக்(25), நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த உமர் பாரூக்(39), உக்கடத்தை சேர்ந்த பெரோஸ்கான்(28) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய புலனாய்வு சிறப்பு அதிகாரிகள் இவர்களிடம் நடத்திய விசாரணையில் குன்னூரில் உள்ள உமர் பாரூக் வீட்டில் ஜமேசா முபின் ரகசிய கூட்டம் நடத்தியதும் அதில் தவ்பிக், பெரோஸ்கான் கலந்து கொண்டதும் தெரியவந்தது.
Also see... பள்ளி மாணவிகளிடம் அத்துமீறிய தலைமை ஆசிரியர்... பெற்றோர் சாலை மறியல்!
மேலும் மூவரும் ஜமேசா மூபினின் தீவிரவாத செயலுக்கு உதவியதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் இன்று பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்பு அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி மூன்று பேரையும் டிசம்பர் 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மூன்று பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
செய்தியாளர்: சோமசுந்தரம், பூந்தமல்லி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kovai bomb blast, Poonamallee Constituency, Thiruvallur