முகப்பு /செய்தி /திருவள்ளூர் / ஆந்திராவில் இருந்து 16 கிலோ கஞ்சா கடத்தி வந்த சென்னை சேர்ந்த 3- இளைஞர்கள் திருத்தணி அருகே கைது..

ஆந்திராவில் இருந்து 16 கிலோ கஞ்சா கடத்தி வந்த சென்னை சேர்ந்த 3- இளைஞர்கள் திருத்தணி அருகே கைது..

கைதானவர்கள்

கைதானவர்கள்

திருப்பதியில் இருந்து வந்த பேருந்தில் சோதனை மேற்கொள்ளும் பொழுது 3 இளைஞர்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruttani (Thiruttani), India

திருத்தணி அருகில் ஆந்திராவிலிருந்து  கஞ்சா கடத்தி வருவதாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் அவரது தனிப்படை சார்ந்த உதவி ஆய்வாளர் குமார், திருத்தணி அருகில் உள்ள சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பொன்பாடி சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து வந்த பேருந்தில் சோதனை மேற்கொள்ளும் பொழுது 3- இளைஞர்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து,  உடமையை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், அந்த மூன்று இளைஞர்கள் வைத்திருந்த பையில் 14 கிலோ கஞ்சா கடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது,

இதனையடுத்து அந்த வாலிபர்கள் சுதாகர் (வயது 25), சரத்குமார் (வயது 29) கிறிஸ்டோபர் ஜோயல் (வயது 20) ஆகியோரை திருத்தணி கலால் காவல் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். மேற்படி மூவர் மீதும் திருத்தணி கலால் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

செய்தியாளர் : சசிகுமார் (திருத்தணி)

First published:

Tags: Andhra Pradesh, Cannabis, Smuggling