Home /News /tiruvallur /

ஸ்ரீவிஷ்ணுவின் திருநாமத்தினை வடிவமாக அமர்ந்து பாராயணம் செய்த 2000 மாணவர்கள்...

ஸ்ரீவிஷ்ணுவின் திருநாமத்தினை வடிவமாக அமர்ந்து பாராயணம் செய்த 2000 மாணவர்கள்...

ஸ்ரீவிஷ்ணுவின் திருநாமத்தினை வடிவமாக அமர்ந்து பாராயணம் செய்த 2000 மாணவர்கள்...

ஸ்ரீவிஷ்ணுவின் திருநாமத்தினை வடிவமாக அமர்ந்து பாராயணம் செய்த 2000 மாணவர்கள்...

Avadi | ஆவடியில் 2000 மாணவர்கள் ஸ்ரீவிஷ்ணுவின் ஒரு அடையாளமான திருநாமத்தினை வடிவமாக கொண்டு அமர்ந்து பாராயணம் மேற்கொண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஆவடி ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் மிகவும் விமரசையாக நடந்தது. இதனை அகில உலக அளவில் விஷ்வ விஷ்ணு சகஸ்ரநாமம் சமஸ்தானம் ( VISVAS ) அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடத்தி வருகிறது. அதனின் ஒரு அங்கமாக ஆவடியில் நேற்று நடந்தது.

    அப்பள்ளியிலேயே தங்கி ஆகம வேதங்களையும் பள்ளி பாடங்களையும் ஒருங்கே திறம்பட கற்கும் வேதபாட சாலை மாணவர்கள் , உற்சவ மூர்த்திகளான ஸ்ரீனிவாச பெருமாள் , ஸ்ரீதேவி , பூதேவி ஆகியோரின் சிலைகளுக்கு மிக அழகாகவும் நேர்த்தியாகவும் அலங்காரம் செய்து பள்ளியின் பொது மேடையில் வைத்து பூஜைகள் செய்தனர்.

    பள்ளி மேடையில் 100 பேரும் பள்ளி மைதானத்தில் 3 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரையுள்ள 2000 மாணவர்களும் ஸ்ரீவிஷ்ணுவின் ஒரு அடையாளமான திருநாமத்தினை வடிவமாக கொண்டு அமர்ந்து பாராயணம் மேற்கொண்டனர் .
    அக்காட்சியானது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.



    பின்னர் பள்ளி முதல்வர் , ஆசிரியர்கள் , பள்ளிமாணவர்கள் அனைவரும் சேர்ந்து ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து ஸ்ரீவிஷ்ணுவின் அனுகிரகத்தைப் பெற்றனர் , பள்ளி முதல்வர் வழிகாட்டுதலின் படி இப்பள்ளியில் இருக்கும் 100 ஆசிரியர்களும் விஷ்ணு சகஸ்ரநாமத்தைக் பக்தியுடன் கற்றுத் தேர்ந்து வகுப்பு வாரியாக அனைத்து மாணவர்களுக்கும் கற்றுக் கொடுத்து வருகின்றனர்.



    Also see... சாலையைக் கடக்க முயன்றபோது விபரீதம்.. அரசுப்பேருந்து மோதி முதியவர் உயிரிழப்பு

    இந்து கலாச்சாரம் பண்பாடு தழைத்தோங்கவும் நல்ல பழக்க வழக்கங்கள் மாறாமல் நிலைத்து நிற்கவும் உறுதுணையாகவும் உற்றதுணையாகவும் ஆசிரியர்கள் விளங்குகிறார்கள் என்பதில் இப்பள்ளி உளம்பூரித்து பெருமையடைகிறது .





    நிகழ்வின் இறுதியாக மாணவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு விழா நிறைவடைந்தது எனபது  குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: கண்னியப்பன், ஆவடி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Avadi, Lord Vishnu, Thiruvallur

    அடுத்த செய்தி