ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

வாடகை வீட்டில் வசித்த சிறுமி.. குடும்பத்தோடு வன்கொடுமை செய்த வீட்டு ஓனர்! திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்!

வாடகை வீட்டில் வசித்த சிறுமி.. குடும்பத்தோடு வன்கொடுமை செய்த வீட்டு ஓனர்! திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

16வயது சிறுமியை தாய்,மகன்,அக்கா ஆகியோர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் திருமுல்லைவாயல் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • 2 minute read
 • Last Updated :
 • Thiruvallur (Tiruvallur), India

  திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மகன், தாய், அக்கா உட்பட 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  திருவள்ளுர் மாவட்டம் ஆவடியடுத்த திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கணவரை பிரிந்து 16 மற்றும் 14 வயது இரண்டு மகள்கள் மற்றும் மகனுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.இவரது வீடு அருகில் வீட்டின் உரிமையாளரான வெங்கடேசன் /34 அவரது தாயார் விஜயா /65 அக்கா லலிதா /36 ஆகியோர் வசித்து வருகின்றனர்.

  வெங்கடேசனுக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் ஆகி இருவரும் பிரிந்து சென்றுவிட்ட நிலையில் மகன், தாய்,அக்கா ஆகியோர் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்தநிலையில் வீட்டின் உரிமையாளரான வெங்கடேசனின் அக்கா லலிதா வாடகை வீட்டில் வசித்து வரும் பெண்ணிடம் தனது தம்பிக்கு திருமணம் செய்துவைக்க பெண் கேட்டுள்ளார். இதற்கு பெண்ணின் தாயார் மறுப்பு தெரிவித்துள்ளார்.பின்னர் வீட்டின் உரிமையாளரான வெங்கடேசன் சிறுமியிடம் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

  Read More ; துப்பாக்கி தோட்டா பாய்ந்து இளைஞர் காயம் :22 பழனி அருகே பரபரப்பு

  இதனையடுத்து சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாதபோது வெங்கடேசனின் அக்கா லலிதாவின் ஆண் நண்பர்கள் வெங்கப்பன், கிரி, பாலாஜி ஆகிய மூவரும் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததை தாயிடம் கூறியுள்ளார். தாய் சிறுமியை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அதில் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியதையடுத்து சிறுமியின் தாயார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  நடந்ததை சிறுமி தாயாரிடம் கூறவே இந்த கொடுமை தெரியவந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் லதா புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளான வீட்டின் உரிமையாளர் வெங்கடேசன், அவரது தாய் விஜயா,அக்கா லலிதா, அக்கா லலிதாவின் ஆண் நண்பர் வெங்கப்பா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள கிரி, பாலாஜி ஆகிய இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.கைது செய்யப்பட்ட தாய்,மகன்,அக்கா உள்பட 4 பேரையும் திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  16வயது சிறுமியை தாய்,மகன்,அக்கா ஆகியோர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் திருமுல்லைவாயல் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Sexual abuse, Thiruvallur