ஹோம் /நியூஸ் /Tiruppur /

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டல் - இளைஞர் போக்சோவில் கைது

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டல் - இளைஞர் போக்சோவில் கைது

இளைஞர் கைது

இளைஞர் கைது

Tirupur : திருப்பூரில் 17 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டி வந்த இளைஞர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது. செய்யப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தாராபுரத்தில் 17 வயது பள்ளி சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து மிரட்டி வந்த மைக் செட் தொழிலாளி போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 8ஆவது வார்டு கொழிஞ்சிவாடி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். கூலி தொழிலாளியான அவரது மகன் மணிகண்டன் என்கிற சஞ்சய் (வயது 21). மணிகண்டன் தாராபுரம் பகுதியில் மைக்செட் கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த (17 வயது)  பள்ளி மாணவி தாராபுரத்தில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவி பள்ளிக்கு செல்லும்போது  மாணவியிடம் மணிகண்டன் பழகி வந்துள்ளார். பின்னர் மாலை வேலைகளில் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு சென்று பல முறை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து மாணவி கேட்ட போது, வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும், கொலை செய்து விடுவேன் என்றும் கூறி மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால்  பயந்து போன மாணவி, இது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிர்ச்சியடைந்த பெற்றோர், தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கவிதா, மணிகண்டனை போக்சோ பிரிவின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தினர்.

Must Read : கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கான ரோபோ - சென்னை ஐஐடி முக்கிய கண்டுபிடிப்பு

இந்த விசாரணையில் மணிகண்டன் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவரை தாராபுரம் குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Published by:Suresh V
First published:

Tags: Crime News, POCSO case, Sexual harassment, Tiruppur