ஹோம் /நியூஸ் /திருப்பூர் /

'எரிந்த உடலோடு அலறியடித்து ஓடி வந்த இளம்பெண்.. காதலிக்கு தீ வைத்த காதலன்.. பல்லடம் அருகே கொடூர சம்பவம்!

'எரிந்த உடலோடு அலறியடித்து ஓடி வந்த இளம்பெண்.. காதலிக்கு தீ வைத்த காதலன்.. பல்லடம் அருகே கொடூர சம்பவம்!

காதலியை உயிருடன் எரித்த காதலன்

காதலியை உயிருடன் எரித்த காதலன்

Palladam murder | காதலி திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காதலிக்கு லோகேஷ் தீ வைத்ததாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Palladam | Tiruppur

பல்லடம் அருகே காதலிக்கு உயிருடன் தீ வைத்த காதலனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் பெத்தாம்பாளையம் சாலையில் பனைப்பாளையம் பகுதியில் இளம்பெண் ஒருவர் உடலில் உடைகள் இல்லாமல் உடல் முழுவதும் தீயால் எரிந்த நிலையில் காப்பாற்றுங்கள் என அலறி கொண்டே காட்டு பகுதியிலிருந்து ஓடி வந்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.‌

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இளம்பெண் தானாக தற்கொலை செய்ய முயற்சித்து தீ வைத்து கொண்டாரா அல்லது கொலை செய்யும் நோக்கில் வேறு யாரேனும் தீ வைத்தார்களா என விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த இளம்பெண் ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த பூஜா (19) என தெரியவந்தது. மேலும் அதே பகுதியில் குடியிருந்து வரும் லோகேஷ் என்ற வாலிபரும் பூஜாவும் ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் பணி புரிந்து வந்ததும், கடந்த 8 மாதங்களாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் லோகேஷ் மற்றும் பூஜா இருவரும் இன்று தனியாக காட்டு பகுதிக்கு சென்றதாகவும், அப்போது பூஜா லோகேஷிடம் உடனடியாக திருமண செய்ய சொல்லி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த லோகேஷ் பூஜாவை கல்லால் அடித்துள்ளார். இதில் தலையில் பலத்த காயத்துடன் மயக்கமடைந்த பூஜாவை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சி செய்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் லோகேஷை தேடி வந்த நிலையில் தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும் மயக்கம் வருவதாக கூறி லோகேஷ் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்ந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த பல்லடம் டி.எஸ்.பி செளமியா மற்றும் போலீசார் லோகேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடலில் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இதனை தொடர்ந்து போலீசார் லோகேஷிடம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

First published:

Tags: Crime News, Murder, Palladam, Tirupur