ஹோம் /நியூஸ் /திருப்பூர் /

திருப்பூர் மாவட்ட பெண்கள் இந்த தொழிலை செய்து நல்ல லாபம் பார்க்கலாம் - தோட்டக்கலைத்துறை முக்கிய அறிவிப்பு

திருப்பூர் மாவட்ட பெண்கள் இந்த தொழிலை செய்து நல்ல லாபம் பார்க்கலாம் - தோட்டக்கலைத்துறை முக்கிய அறிவிப்பு

காளான் வளர்ப்பு

காளான் வளர்ப்பு

Tiruppur District | திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாரத்தில் உள்ள பெண்கள் குடில் அமைத்து காளான் வளர்த்து நல்ல லாபத்தில் தொழில் செய்யலாம் என்று தோட்டக்கலைத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாரத்தில் காளான் வளர்ப்பு குடில் அமைப்பதன் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு பெண் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் காளான் விற்பனை அதிகரித்து வருகிறது. சத்துகள் நிறைந்த காளான் சாப்பிடுவதை மக்கள் அதிகமாக விரும்புகின்றனர். சைவப்பிரியர்களும் விரும்பி சாப்பிடும் உணவாக இது இருந்து வருகிறது. இதனால் சந்தையில் காளானுக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது

எனவே, காளான் வளர்ப்பு என்பது சிறந்த வருவாய் ஈட்டக்கூடிய தொழிலாக உள்ளது. சிறிய முதலீட்டில் குறைந்த அளவு இடத்தில் காளான் வளர்ப்பு மேற்கொள்ள முடியும். இந்நிலையில், பெண் விவசாயிகளுக்காக காளான் வளர்ப்புக் குடில் அமைக்க தோட்டக்கலைத்துறை மூலம் மானியம் வழங்கப்படுவதாக உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகன ரம்யா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், உடுமலை வட்டாரத்தில் 2022-23 ம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட குறிஞ்சேரி, சின்னவீரன்பட்டி, கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனூர், ஆலாம்பாளையம், குருவப்ப நாயக்கனூர், சின்னகுமாரபாளையம், ஜிலோபநாயக்கன்பாளையம், தின்னப்பட்டி, மொடக்குப்பட்டி, தீபாலப்பட்டி, வடபூதனம் ஆகிய 12 கிராமங்களில் உள்ள பெண் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த திட்டத்தில் 600 சதுர அடியில் காளான் வளர்ப்புக் குடில் அமைக்க 50 சதவீத மானியமாக ரூ.1 லட்சம் வழங்கப்பட இருக்கிறது. மேலும், அவர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம் மற்றும் பொங்கலூர் வேளாண்மை ஆராய்ச்சி மையம் மூலம் காளான் வளர்ப்பு குறித்த பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

Must Read : மயிலாடுதுறை மாவட்டம் திருப்பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!?

காளானுக்கான தேவை அதிகம் இருப்பதால் சந்தை வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. எனவே காளான் உற்பத்தி செய்வதன் மூலம் பெண் விவசாயிகள் புதிய தொழில் முனைவோராக உருவாகலாம். இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்பும் விவசாயிகள் https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet//index.php என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். அல்லது உடுமலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Agriculture, Local News, Mushroom Cultivation, Tiruppur