Home /News /tiruppur /

திருப்பூர் செல்போன் கடையில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள புதிய போன்கள் திருட்டு.. வட மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது...

திருப்பூர் செல்போன் கடையில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள புதிய போன்கள் திருட்டு.. வட மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது...

திருப்பூர்- செல் போன் திருட்டு சிசிடிவி வீடியோ

திருப்பூர்- செல் போன் திருட்டு சிசிடிவி வீடியோ

Tirupur | திருப்பூரில் செல்போன் கடையில் 4 லட்சம் மதிப்புள்ள புதிய போன்களை திருடிய பிகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சின்னக்கரை லட்சுமி நகர் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் சனூப். கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர் திருப்பூரில் கடந்த ஆறு ஆண்டுகளாக செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல நேற்றிரவு கடையை அடைத்து விட்டு இவர் சென்ற நிலையில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் கடையில் பூட்டை உடைத்து உள்ளே இருந்து 4 லட்சம் மதிப்பிலான 62 புதிய செல் போன்களை திருடி சென்றனர்.

    காலையில் வந்து பார்த்த சனூப் கடையில் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்த நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சித் தாஹிர் , சுகிர்குமார் என்ற இருவரும் செல்போன் கடையில் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    also see... போலீசாரை வீட்டிற்கு அழைத்து நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்…

    இதனை அடுத்து இருவரையும் கைது செய்த பல்லடம் போலீசார் அவர்களிடமிருந்து 62 புதிய செல்போன்களை கைப்பற்றினார். இருவரையும் கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    செய்தியாளர்: பாலாஜி பாஸ்கர், திருப்பூர்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Mobile phone, Theft, Tiruppur

    அடுத்த செய்தி