Home /News /tiruppur /

திருப்பூரில் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய காலவர் உட்பட 2 பேர் போக்சோவில் கைது...

திருப்பூரில் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய காலவர் உட்பட 2 பேர் போக்சோவில் கைது...

திருமுருகன் பூண்டி காவல் நிலையம்

திருமுருகன் பூண்டி காவல் நிலையம்

Tiruppur | சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த திருமுருகன் பூண்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் யுவராஜ் என்பவரும் அவ்வப்போது அந்த மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India
திருப்பூரைச் சேர்ந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் 17 வயது மாணவி கடந்த சில தினங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவரது பெற்றோர்கள் மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். மருத்துவர் பரிசோதனை செய்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக பெற்றோர்களிடம் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் இது தொடர்பாக திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் கவிதா  மாணவியிடம் விசாரணை மேற்கொண்டதில் நெல்லை மாவட்டம் கீழப்புதூரை சேர்ந்த மாரிச்செல்வன் என்பவருடன் 4 வருடங்களாக சிறுமி பழகி வந்ததாகவும் மாரிச்செல்வன் அதே பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் மேலும் திருமண ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

மேலும் விசாரணை மேற்கொண்டதில் சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த திருமுருகன் பூண்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் யுவராஜ் என்பவரும் அவ்வப்போது அந்த மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து திருப்பூர் மாநகர காவல் ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு துணை ஆணையர் தலைமையில் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Also see... சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காவல் உதவி ஆய்வாளர் போக்சோவில் கைது  

விசாரணையில் மாரிச்செல்வன் மற்றும் யுவராஜ் ஆகியோர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரன்  உத்தரவின் பேரில் இருவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Crime News, Pocso, Thiruppur

அடுத்த செய்தி