ஹோம் /நியூஸ் /திருப்பூர் /

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. வாட்ஸ்ஆப் குழுவில் சட்டவிரோதமாக பதிவிட்ட இருவர் திருப்பூரில் கைது

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. வாட்ஸ்ஆப் குழுவில் சட்டவிரோதமாக பதிவிட்ட இருவர் திருப்பூரில் கைது

சட்ட விரோத செயல்பாடு

சட்ட விரோத செயல்பாடு

Tirupur : திருப்பூரைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கலகம் விளைவிக்கும் நோக்கில் செயல்பட்டது, பொது தளத்தில் ஆத்திரமூட்டும் வகையில் பதிவேற்றம் செய்தது உள்ளிட் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு சிறையில் அடைக்கப்பட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

வாட்ஸ்ஆப் குழுவில் கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக சட்ட விரோதமாக பதிவிட்ட இரண்டு இளைஞர்கள் மீது, நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருப்பூர் மாவட்ட போலீசார் அவர்களை கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த அருண்குமார் (22). என்பவரும், உடுமலைப்பேட்டை எஸ்.எஸ் காலனியில் வசிக்கும் வெங்கடேஷ் (20) என்ற  இளைஞரும் தங்கள் பகுதியை சேர்ந்த வெவ்வேறு வாட்ஸ் ஆப் குழுவில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழப்பு தொடர்பாக ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி உள்ளனர்.

அதில் சட்டவிரோதமாக அரசுக்கு எதிராக செயல்பட தூண்டும் விதத்தில் வாசகங்கள் இடம் பெற்று இருந்ததாகவும், அரசுக்கு எதிராக பொதுமக்களை தூண்டும் நடவடிக்கையில் இளைஞர்கள் ஈடுபட்டதாகவும் கூறி உடுமலைப்பேட்டை மற்றும் காங்கேயம் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர்கள் மீது கலகம் விளைவிக்கும் நோக்கில் செயல்பட்டது, பொது தளத்தில் ஆத்திரமூட்டும் வகையில் பதிவேற்றம் செய்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்தந்த பகுதியில், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Must Read : நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடையை கழற்ற வைத்த விவகாரம்.. 5 பேர் கைது!

மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சில நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் நபர்கள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அத்தகைய செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

First published:

Tags: Online crime, Tirupur, WhatsApp