ஹோம் /நியூஸ் /திருப்பூர் /

கள்ளக்காதலனுக்காக குழந்தையை கொன்ற பெண்.. திருப்பூரில் அரங்கேறிய பயங்கரம்

கள்ளக்காதலனுக்காக குழந்தையை கொன்ற பெண்.. திருப்பூரில் அரங்கேறிய பயங்கரம்

திருப்பூர்

திருப்பூர்

Crime News : திருப்பூரில் 10 மாதம் சுமந்த குழந்தையை இரக்கமில்லாமல் தாயே கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

தாராபுரம் அருகே 2 வயது குழந்தையை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த இளம் பெண் கைது செய்யப் பட்டார். அண்டாவில் விழுந்து குழந்தை இறந்து விட்டதாக நாடகமாடியது போலீஸ் விசார ணையில் அம்பலமாகி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடத்தை அடுத்த முண்டுவேலம்பட்டி பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன் ராஜ் (வயது 22). கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அனிதா (20) என்ற பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தனர் இதன் விளைவாக அனிதா கர்ப்ப மானார்.

அதன் பின்னர் அனிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும்போது அனிதாவுக்கு வயது 18 என்பதால் போலீசார் விசாரித்து மோகன்ராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். குழந்தை பிறந்த பின்னர் அந்த குழந்தைக்கு தினேஷ் என்று பெயர் வைத்து அனிதா வளர்த்து வந்தார்.

Also Read: ஆபாசக்கூத்து.. கைதேர்ந்த கேடி... கவிஞர் தாமரை காட்டம்.. சிக்கலில் விஜி பழனிச்சாமி

இந்த நிலையில் தனது குழந்தையுடன் அடிக்கடி அனிதா உடுமலை பகுதிக்கு வேலைக்கு சென்று வந்தார். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் அனிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. அதன்பின்னர் அனிதா, அவரிடம் தனக்கு குழந்தை இருப்பதை கூறி, அவரை முறைப்படி திருமணம் செய்து கொண்ட தாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பின்னர் அனிதா தனது குழந்தை தினேசுடன் உடுமலையில் உள்ள கணவர் வீட்டில் வசித்து வந்தார்.

அதன் பின்னர் அனிதா 2-வதாக கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து பிரவசத்திற்காக முண்டுவேலம்பட்டியில் உள்ள வீட்டிற்கு வந்தார். அவருக்கு கடந்த 5 மாதங்க மற்றொரு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பின்னர் அவர் உடுமலை போகாமல் முண்டுவேலம்பட்டியில் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். அப்போது மறுபடியும் தனது காதலன் மோகன்ராஜூடன் அனிதா வுக்கு தொடர்பு ஏற்பட்டு ஒன்றாக இருந்துள்ளனர். இந்நிலையில் மோகன்ராஜ் மீதான போக்சோ வழக்கு விசாரணைக்கு வர இருந்த நிலையில் அனிதாவும், அவருடையமோகன்ரா ஜூம் அச்சத்தில் இருந்துள்ளனர்.

Also Read: அண்ணாமலை இருக்கும் மேடையில் ஏறுவீர்களா.. ஏறினால் கால் இருக்காது - சசிகலா புஷ்பா பேச்சால் பரபரப்பு

இந்த சூழ்நிலையில் கடந்த 19-ந்தேதி குழந்தை தினேஷ் அங்குள்ள அண்டா தண்ணீரில் திடீரென்று பிணமாக மிதந்தான்.தகவல் அறிந்து போலீசார் வந்து விசாரித்தபோது. தினேஷ் அண்டாவுக்குள் தவறி விழுந்து இறந்து விட்ட தாக அனிதா கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் குழந்தை தினேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அனிதா குடியிருந்த வீட்டின் அருகில் வசித்த ஒருவர். இது குறித்து சந்தேகம் இருப்பதாகவும், அனிதாவுக்கும், அவளுடைய கள்ளக்காதலன் மோகன்ராஜிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் புகார் கொடுத்தார்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது (பொறுப்பு) அனிதாவையும்,அவளுடையகள்ளக்காதலன் மோகன்ராஜையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தார் விசாரணையில் அவர்கள் கூறிய தகவல் போலீசாரை திடுக்கிட வைத்தது .இவர்கள் மீதான போக்சோ வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், குழந்தை தினேசிடம்டி. என்.ஏ.பரிசோதனை செய்தால் சிக்கலில் மாட்டிக்கொள்வோம் என நினைத்து. குழந்தையை கொல்ல அனிதாவும், மோகன்ராஜூம்முடிவு செய்துள்ளனர்.

அந்த திட்டத்தை நிறைவேற்ற கள்ளக்காதலன் மோகன்ராஜை தான் தங்கி இருந்த வீட்டிற்கு அனிதா வரவழைத்துள்ளார். அங்கு அவர் வந்ததும் குழந்தை தினேசை கழுத்தை நெரித்து கொன்று, உடலை அண்டாவுக்குள் போட்டு விட்டு. குழந்தை அண்டாவில் தவறி விழுந்து இறந்ததாக நாடகம் ஆடியதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அனிதா மற்றும் அவருடைய கள்ளக்காதலன் மோகன்ராஜ ஆகிய இருவரையும் போலீ சார் கைது செய்தனர். பின் னர் அவர்களை தாராபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.10 மாதம் சுமந்த குழந்தையை இரக்கமில்லாமல் தாயே கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

First published:

Tags: Child murdered, Illegal affair, Illegal relationship, Local News, Tamil News