Home /News /tiruppur /

Tirupur | பாம்பு விஷத்தை முறிக்கும் புற்று மண்; திருப்பூர் வாழை தோட்டத்து அய்யன் கோவில் பற்றிய சிறப்பு தொகுப்பு

Tirupur | பாம்பு விஷத்தை முறிக்கும் புற்று மண்; திருப்பூர் வாழை தோட்டத்து அய்யன் கோவில் பற்றிய சிறப்பு தொகுப்பு

வாழைத் தோட்டத்து அய்யன் கோவில்

வாழைத் தோட்டத்து அய்யன் கோவில்

Tirupur | திருப்பூரிலுள்ள வாழைத் தோட்டத்து அய்யன் கோவில் அந்த பகுதிகள் விரும்பி வணங்கும் கோயிலாக உள்ளது.

திருப்பூர் மாவட்டம் சோமனூரை அடுத்து அமைந்துள்ளது வாழைத் தோட்டத்து அய்யன் கோவில். இந்த கோவில் கொங்கு மண்டல மக்களால் போற்றப்படுகிறது. தீரா நோய்களையும் தோஷங்களையும் தீர்க்கும் இந்த கோயிலின் சிறப்பினை காணலாம்.

வாழைத்தோட்டத்து அய்யன் கோவிலில் கிடைக்கும் புற்றுமண்னை சிறிது எடுத்து வீடுகளிலும், வயல்வெளிகளிலும் தெளித்தால் அங்கு பாம்பு விஷ ஜந்துக்கள் போன்றவை அண்டாது என்ற நம்பிக்கை கொங்கு மக்களிடையே உள்ளது.

இக்கோவிலில் சிறப்பு என்னவென்று பார்த்தால் மற்ற கோவில்களில் சாதாரண ஒரு மனிதன் கருவறைக்குள் செல்ல முடியாது. ஆனால் இக்கோவிலில் ஒரு சாதாரண மனிதன் கருவறைக்கு சென்று இறைவனை வேண்டி, இறைவனுக்கு அருகில் இருக்கும் புற்று மண்ணை எடுத்துக் கொண்டு வர முடியும் என்பது இக்கோவில் சிறப்பாக கருதப்படுகிறது.

வாழைத் தோட்டத்து அய்யன் கோவில்


மேலும் இந்த கோவிலுக்கு பக்தர்கள் தினந்தோறும் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அக்கோவிலில் இருக்கும் புற்று மண்ணை எவ்வளவு எடுத்தாலும் அது குறையவே குறையாது என்பது இக்கோவிலுடைய இறைவனின் செயல் தான் என்று அங்கு வரும் பக்தர்கள் முழுமையாக நம்புகிறார்கள்.

கோவிலின் தல வரலாறு:

ஒரு சாதாரண மனிதனாக பிறந்து ஒரு சித்தராக இறந்த வரலாறுதான் இந்த வாழைத்தோட்டத்து அய்யன் உடைய வரலாறு. இக்கோவிலுக்கு ஏன் வாழை தோட்டத்து அய்யன் என்று பெயர் வந்தது என்றால் கோவிலுடைய தலவிருட்சம் கிளுவை மரம், கிளுவை மரமானது முற்காலத்தில் ஒரு வாழைத் தோட்டத்திற்கு நடுவே இருந்ததாகவும் அந்த தோட்டத்திற்கு நடுவே கோவில் கொண்டதால் கோவிலானது வாழைத்தோட்டத்து அய்யன் திருக்கோவில் என்று பெயர் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.

வாழைத் தோட்டத்து அய்யன் கோவில்


இன்னொரு காரணத்தையும் சொல்றார்கள், மரங்களிலேயே மிகவும் சிறந்த தன்மை உடையது வாழை மரம்தான். இதில் எந்த பொருளுமே வீணாகாது வாழையடி வாழையாக தழைக்க கூடியதுதான் இது. இதைப்போன்றே இங்கு வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை எல்லாம் கொடுக்கும் கடவுள் தான் இக்கடவுள். அதன் காரணமாகவே இக்கோவில் உடைய பெயரானது வாழைதோட்டத்து அய்யன் கோவில் என்று மாறியது என்றும் கூறப்படுகிறது

தற்போது இந்த கோவில் இருக்கும் பகுதியில் இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1777 ஆம் ஆண்டு அய்யன் என்ற ஒருவர் இருந்தார். அவருடைய பெயர் சின்னையன். இவர் தன்னுடைய 12ஆம் வயது வரை கல்வி பயின்றார். இவர் ஏற்கனவே ஆன்மீகத்தில் பற்று கொண்டவராக இருந்தார். இவர் சிவன் பக்தர். சிவனை தன் வீட்டில் வைத்து தினம்தோறும் வழிபடுவார். இப்படி இருக்கும்போது இவருக்கு படிப்பு சரியாக அமையாததால் தன்னுடைய தந்தை விருப்பப்படி மாடு மேய்க்கும் தொழிலை செய்து வந்தார்.

வாழைத் தோட்டத்து அய்யன் கோவில்


இப்படி ஒரு நாள் தன்னுடைய மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று அங்கு சிறு சிறு கற்களை அடுக்கி அவற்றை தெய்வமாக வணங்கி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு பெரியவர் சென்றபோது இச்சிறுவனின் செயலை அவர் பார்த்தார். உடனே சிறுவனை அழைத்து சர்வ சங்ஹார மந்திரத்தையும், பஞ்சாட்சர மந்திரத்தையும் சொல்லிக் கொடுத்தார். பிறகு தன்னுடைய வீட்டிற்கு சென்று தன்னுடைய வீட்டில் வைத்திருந்த சிவபெருமானையும் பார்வதி தேவியையும் பார்த்தார். அப்போது சிவபெருமானின் அருகில் அந்த பெரியவர் இருந்தார்.

சின்னையன் கண் மூடி கண் திறப்பதற்குள் அந்தப் பெரியவர் அங்கிருந்து மறைந்து விட்டார். உடனே தன்னை பார்க்க வந்தது சிவபெருமான் தான் என்று எண்ணி மகிழ்ந்தார். பிறகு நோயின் காரணமாகவோ அல்லது விஷப் பூச்சிகளின் கடிகளுக்கு மருந்து வேண்டி இவரை நாடி வரும் போது அவர் பஞ்சாட்சர மந்திரத்தையும் விபூதியையும் கொடுத்து குணப்படுத்தி வந்தார். ஆனால் யாரிடமும் இதற்காக பணம் வாங்க மறுத்து விட்டார்.

மேலும் அப்பகுதியில் யாருக்கு எந்த நோயாக இருந்தாலும், மேலும் விஷ பூச்சி கடித்தாலும் கூட எல்லாரும் இவரை நாடியே வந்தார்கள். அப்படி வந்தவர்களில் ஒரு தாசில்தாரும் இருந்தார். அந்த தாசில்தாருடைய மனைவிக்கு வெண்குஷ்ட நோய் குணமாகியது. இதன் காரணமாக ஆயிரம் பொற்காசுகளை அந்த தாசில்தார் இவருக்கு கொடுத்தார். அதை ஏற்காத சின்னையன் அந்த அனைத்தையுமே ஆண்டவனுக்கு  செலவிட கூறிவிட்டார் என்ற கதைகள் உண்டு.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Tirupur

அடுத்த செய்தி