ஹோம் /நியூஸ் /Tiruppur /

திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்...

திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்...

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருப்பூரில் பராமரிப்பு பணி காரணமாக இந்தந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

திருப்பூரில் நாளை ஜூலை 13-ம் தேதி (புதன்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பெருமாநல்லூர், அருள்புரம் பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அருள்புரம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட அல்லாளபுரம் உயர் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், கணபதி பாளையம், எஸ்.எம்.சி காலனி, பாலாஜி நகர், திருமலை நகர், பொன்னகர், அவரபாளையம், அல்லாளபுரம், வடுகபாளையம் அகிலாண்டபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பெருமாநல்லூர், பழங்கரை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருமாநல்லூர் துணை மின் நிலையம்:

பெருமாநல்லூர், கணக்கம்பாளையம், வாவிபாளையம், பூலுவபட்டி, பாண்டியன் நகர், ஆண்டிபாளையம், செட்டிபாளையம், காளிபாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, நெருப்பெரிச்சல், அய்யம்பாளையம், தொரவலூர், வலசு பாளையம், கந்தம்பாளையம், எம்.தொட்டிபாளையம்.

பழங்கரை துணை மின் நிலையம்:

அவினாசி, லிங்கம்பாளையம், பழங்கரை, தங்கம் கார்டன், விஸ்வபாரதி பார்க், தேவம்பாளையம், கைக்காட்டிபுதூர், டீ பப்ளிக் ஸ்கூல், நல்லிக்கவுண்டம்பாளையம், ரங்கா நகர், ராஜன் நகர், ஆர்.டி.ஓ ஆபீஸ், கமிட்டியர்காலனி,குளத்துப்பாளைம், வெங்கடாசலபதி நகர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Tirupur