ஹோம் /நியூஸ் /திருப்பூர் /

ஓரினச்சேர்க்கைக்கு பணம் தராததால் அரங்கேறிய கொலை.. திருப்பூர் சூப்பர்வைசர் கொலையில் பகீர் தகவல்

ஓரினச்சேர்க்கைக்கு பணம் தராததால் அரங்கேறிய கொலை.. திருப்பூர் சூப்பர்வைசர் கொலையில் பகீர் தகவல்

திருப்பூர் கொலை

திருப்பூர் கொலை

Tirupur News: திருப்பூரில் பனியன் நிறுவன சூப்பர்வைசர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு, பணம் கொடுக்காத ஆத்திரத்தில் 2 இளைஞர்கள் அவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையத்தை அடுத்த எடிசன்நகர் பகுதியில், கடந்த 3ம் தேதி இரவு ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயத்துடன் கிடப்பதாக அப்பகுதி மக்கள்  வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும்  அக்கம்பக்கத்தினர் அந்த நபரை மீட்டு 108 ஆம்புலன்சு மூலமாக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அந்த நபர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

வேலம்பாளையம் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸாரின் விசாரணையில் கத்திக் குத்துப்பட்டு இறந்த நபர் திருமுருகன்பூண்டியை அடுத்த துரைசாமிநகரை சேர்ந்த கோபி கிருஷ்ணன் (வயது 39) என்பது தெரியவந்தது.  அவர் ஆஷர்நகர் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.

கொலை செய்யப்பட்ட கோபி கிருஷ்ணனுக்கு திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, தற்போது அவர் பெற்றோருடன் வசித்து வந்ததும் தெரிந்தது. தொடர்ந்து நடத்திய  விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மனைவியை பிரிந்து வாழ்ந்த கோபி கிருஷ்ணனுக்கு ஓரினச் சேர்க்கை பழக்கம் இருந்துள்ளது. நவம்பர் 3-ம் தேதி இரவு ஒரு ஆபாச செயலியில் ஓரினச் சேர்க்கை தொடர்பாக தேடுதலில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாலிபர் ஒருவர் அந்த செயலி மூலமாக கோபி கிருஷ்ணனை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்துள்ளார். மேலும் அவரை  வேலம்பாளையத்தை அடுத்த எடிசன்நகர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு வருமாறு அந்த வாலிபர் கூறி உள்ளார்.

இதையடுத்து கோபி கிருஷ்ணன் தனது தாயிடம் ஏ.டி.எம்.-ல் பணம் எடுத்து வருவதாக கூறி விட்டு சென்றுள்ளார். பின்னர் ஆபாச செயலியில் வாலிபர் கூறிய இடத்திற்கு கோபி கிருஷ்ணன் சென்றுள்ளார். அங்கு இருந்த 2 வாலிபர்களுடன் அவர் மதுகுடித்து விட்டு தனித்தனியாக ஓரினச் சேர்க்கையில் கோபி கிருஷ்ணன் ஈடுபட்டுள்ளார்.

Also Read:  கள்ளக்காதலியின் தொல்லை தாங்காமல் அடித்துக்கொன்ற வடமாநில இளைஞர் - குஜராத்தில் சிக்கிய கள்ளக்காதலன்

இதன் பின்பு அந்த வாலிபர்கள் இருவரும் கோபி கிருஷ்ணனிடம் ரூ.17,000 பணம் தருமாறும், அதை கூகுல் பே மூலமாக அனுப்புமாறும் கூறி உள்ளனர். இதையடுத்து பணத்தை அனுப்புவது போல அனுப்பிய கோபி கிருஷ்ணன் கூகுல் பேக்கான ரகசிய எண்ணை தவறாக போட்டுள்ளார். 3 முறை தவறாக போட்டதால் அவருடைய கூகுல் பே கணக்கு பூட்டப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்களில் ஒருவர் மது பாட்டிலால் கோபி கிருஷ்ணன் தலையில் அடித்துள்ளார். இதில் அவருக்கு ரத்தம் கொட்டியுள்ளது. அதோடு நிறுத்தி விடாமல் 2 பேரும் சேர்ந்து கத்தியால் அவருடைய கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் குத்தி விட்டு, அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்த நிலையில்தான் கத்திக் குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கோபி கிருஷ்ணன் எடிசன்நகர் பகுதியில்  மீடகப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த  வேலம்பாளையம் போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் கோபி கிருஷ்ணனை கொலை செய்தது மதுரையை சேர்ந்த விக்னேஷ் (எ) மருதுபாண்டி (23), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பரணிதரன் (26) என்பது தெரிய வந்தது.

அவர்கள் இருவரும்  திருமுருகன்பூண்டி பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும், ஆபாச செயலி மூலமாக கோபி கிருஷ்ணனை வரவழைத்து ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு, பணம் கேட்டு கொடுக்காத ஆத்திரத்தில் அவரை கொலை செய்தது  போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் விக்னேஷ் (எ) மருதுபாண்டி, பரணிதரன் ஆகியோர் பிள்ளையார்பட்டி பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் இருவரையும் கைது செய்து திருப்பூருக்கு அழைத்து வந்தனர். கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் ஏற்கனவே வழக்கு இருப்பதாகவும், விக்னேஷ், மருதுபாண்டியுடன் கோபி கிருஷ்ணன் ஏற்கனவே பலமுறை ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். திருப்பூரில் பனியன் நிறுவன சூப்பர்வைசருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு, பணம் கொடுக்காத ஆத்திரத்தில் அவரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

First published:

Tags: Crime News, Homosex, Local News, Tirupur