முகப்பு /செய்தி /திருப்பூர் / வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்து வதந்தி... ஜார்க்கண்ட் ரயில்வே ஊழியரை தட்டி தூக்கிய திருப்பூர் போலீஸ்..!

வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்து வதந்தி... ஜார்க்கண்ட் ரயில்வே ஊழியரை தட்டி தூக்கிய திருப்பூர் போலீஸ்..!

மாதிரி படம்

மாதிரி படம்

Crime News | புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதுபோல் போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ரயில்வே ஊழியரை திருப்பூர் தனிப்படை போலீசார்  கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruppur, India

தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வெளியான போலி வீடியோக்கள்  வெளியாகின. இதனால் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட அச்சத்தை போக்க தமிழ்நாடு அரசு பல நடவடிக்கைகள எடுத்தது.

இதனிடையே, புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் போலியான வீடியோக்கள் குறித்து திருப்பூர் சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பீகார் மாநிலத்தை சேர்ந்த ருபேஷ்குமார் என்பவரை கைது செய்திருந்தனர். தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் குமார் (24) ரயில்வேயில் பார்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் கணக்கில் வேறு மாநிலங்களில் நடந்த தாக்குதல் சம்பவத்தை தமிழ்நாட்டில் நடந்தது போன்று போலியான வீடியோக்களை சித்தரித்து பதிவிட்டிருந்தது தெரியவந்தது.

இதையும் படிங்க : 90% நிலத்தை கையகப்படுத்திய பின்னரே பாலம் மற்றும் சாலைப் பணிகள் தொடக்கம்.. அமைச்சர் எ.வ.வேலு

இதையடுத்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக பிரசாந்த் குமார் மீது வழக்கு பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, தனிப்படை போலீசார் ஜார்க்கண்ட் சென்று அவரை கைது செய்தனர். மேலும், தற்போது அவரை திருப்பூர் அழைத்து வரும் பணியில் முழுவீச்சில் இறங்கியுள்ளனர். திருப்பூர் வந்தவுடன் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Crime News, Local News, Migrant Workers, Tiruppur