முகப்பு /செய்தி /திருப்பூர் / பல்லடத்தில் இரவில் உலாவும் கம்பளி திருடன்.. பீதியில் பொதுமக்கள்

பல்லடத்தில் இரவில் உலாவும் கம்பளி திருடன்.. பீதியில் பொதுமக்கள்

சிசிடிவியில் சிக்கிய திருடன்

சிசிடிவியில் சிக்கிய திருடன்

Crime News : பல்லடத்தில் கம்பளி திருடன் வீடுவீடாக சென்று நோட்டமிடும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்டம் பல்லடம் - திருப்பூர் சாலையில் அமைந்துள்ள ராயர் பாளையம் பகுதியில்  2,000 மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தனியார், அரசு பள்ளிகள் மற்றும் ஏராளமான வணிக  நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

ராயர்பாளையம் குடியிருப்பு பகுதியில் நேற்று நள்ளிரவில் கம்பளி போர்த்தியபடி மர்ம ஆசாமி ஒருவர் சென்றுள்ளார். அந்த பகுதியில் உள்ள ஒருவர் ஒவ்வொரு வீடாக நுழைந்து அங்குள்ள பொருட்களை நோட்டமிட்டுள்ளார். யாரேனும் வீதியில் வருவதைக் கண்டால் அங்கிருந்து நைசாக தப்பிச் செல்வதுமாக இருந்துள்ளார். இதுவரை திருட்டு சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.

கம்பளி திருடன் வீடுவீடாக சென்று நோட்டமிடும் காட்சிகள் அப்பகுதியில் ஒரு வீட்டில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனைக்கண்ட அப்பகுதியில் அதிர்ச்சியடைந்தனர்.  கம்பளி திருடன் அந்த பகுதி முழுவதும் நோட்டமிட்டு உள்ளதாகவும் அசம்பாவித சம்பவம் நடைபெறும் முன்னர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

First published:

Tags: CCTV Footage, Crime News, Tamil News, Tirupur