ஹோம் /நியூஸ் /திருப்பூர் /

என்னடா மணியா.. நம்ம ஜாதகம் உள்ள போகுமா..! 25 ஏக்கர் நிலம் இருந்தா வான்னு கூப்பிடுறாங்க - வரன் தேடும் நிகழ்வில் இளைஞர் குமுறல்

என்னடா மணியா.. நம்ம ஜாதகம் உள்ள போகுமா..! 25 ஏக்கர் நிலம் இருந்தா வான்னு கூப்பிடுறாங்க - வரன் தேடும் நிகழ்வில் இளைஞர் குமுறல்

வரன் தேடும் நிகழ்வில் இளைஞர் குமுறல்

வரன் தேடும் நிகழ்வில் இளைஞர் குமுறல்

வரன் தேடும் நிகழ்வில் கலந்து கொள்ள சென்ற இளைஞர் ஒருவர் தனது மனக்குமுறல்கள் நண்பர்களிடம் கொட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

கோவை மண்டலத்தில் தற்பொழுது மணமகள் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்படுவதால் திருமண வயதை எட்டிய ஆண்கள் பலரும் மணமகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். பலர் 40 வயது வரையிலும் பெண் கிடைக்காமல் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாமல் பெரும் துயருக்கு ஆளாகி உள்ளனர். அதிலும் குறிப்பாக கோவை மண்டலத்தில் குறிப்பிட்ட சமூகத்தில் மணமகள் கிடைப்பது அரிதாகி விட்டது. இதனால் திருமணத்திற்கு பெண் தேடி பல இடங்களில் பெற்றோர் அலைந்து வருகின்றனர்.

மணமகள் சரிவர கிடைப்பதில்லை என்பதால் மணமகளின் பெற்றோருக்கு மவுசு ஏறி வருகிறது. அதனால் அவர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது‌. இதனால் வசதி குறைந்த ஆண்கள் பலர் திருமணம் செய்ய முடியாமல் வெறுத்து போய் ஒதுங்கும் சூழலும் நிலவி வருகிறது. உள்ளூரில் பெண் கிடைக்காத சூழலில் வெளியூர் போன்ற இடங்களில் நடைபெறும்    திருமண வரன் தேடும் நிகழ்ச்சிகளை ஏராளமானோர் நாட துவங்கி உள்ளனர்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த சின்ன வீரன் பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 13ஆம் தேதி குறிப்பிட்ட சமூகம் சார்பில் நேரடி வரன் பார்க்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் என பல மாவட்டங்களில் உள்ள தங்கள் சமூகத்தினருக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

Also Read: 250 பெண்களை மணக்க குவிந்த 14,000 ஆண்கள்.. கர்நாடகாவில் நடைபெற்ற வரன் பார்க்கும் நிகழ்வு

நீண்ட நாட்களாக வரன் தேடி வந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் திருமணம் நடக்கும் என பலர் தங்கள் பெற்றோருடன் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். இதனால் அந்தப் பகுதியே வரன் தேடும் மாப்பிள்ளைகளால் நிரம்பி வழிந்தது. ஆனால் 30க்கும் குறைவான மணமகள் வீட்டார்‌ மட்டுமே வந்திருந்ததால் மணமகன் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருந்தாலும் தங்கள் ஜாதகத்தை பதிவு செய்து வைத்தால் பொருத்தமான வரன் அமைய வாய்ப்பு உள்ளது என பலர் ஜாதகத்தை பதிவு செய்ய முயன்றனர்.
 
View this post on Instagram

 

A post shared by News18 Tamil Nadu (@news18tamilnadu)இதனால் கடுமையான நெரிசல் ஏற்பட்டுள்ளது. மணமகன்கள் அதிக அளவில் வந்ததால் மணமகள் வீட்டாருக்கு  (சாய்ஸ்) ஏற்பட்ட கிராக்கி காரணமாக அதிக சொத்து உள்ள மணமகனை தேர்ந்தெடுக்க முயன்றனர். இதனால் 25 ஏக்கர் நிலம் உள்ள மணமகன்கள் முதலில் வருமாறு மைக்கில் அழைப்பு விடுத்தனர். இதனால் அங்கு சென்ற பல மணமகன்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

கோவையில் இருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற இளைஞர் ஒருவர்  இது குறித்து தனது நண்பர்களிடம் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் இவ்வளவு கூட்டம் இருக்கு நம்ப ஜாதகம் உள்ளே போகுமா.. இல்லை தண்ணி அடுப்புக்கு தான் போகுமா.. நம்ப ஊரிலேயே ஒரு பெண் பாக்கலாம் என சொன்னேன்‌ கேட்காம இவ்வளோ தூரம் வந்து பூராவும் பசங்க வீட்டு ஆளுங்க தான். புள்ளைங்க வீட்டு ஆளுகளையே காணமே.  நம்ப ஜாதகம் உள்ளே போகாது மணியா எல்லாம் 25 ஏக்கர் கேக்குறாங்க.. 25 ஏக்கர் இருந்தா நான் ஏன் இங்க வரேன்.என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

Published by:Ramprasath H
First published:

Tags: Coimbatore, Tamil News, Tirupur, Viral Video, Youths