முகப்பு /செய்தி /திருப்பூர் / ரயில் மூலம் கஞ்சா கடத்தல் : ஒடிசா மாநிலத்தில் இருந்து திருப்பூருக்கு கடத்திய 2 பேர் கைது

ரயில் மூலம் கஞ்சா கடத்தல் : ஒடிசா மாநிலத்தில் இருந்து திருப்பூருக்கு கடத்திய 2 பேர் கைது

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு கைதான நபர்கள்

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு கைதான நபர்கள்

Tirupur Kanja Arrest | கஞ்சா இருந்ததும் வாசம் தெரியாமல் இருக்க பிளாஸ்டிக் டேப்பை கொண்டு முழுவதும் சுற்று இருந்ததும் தெரிய வந்தது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruppur, India

ஒரிசா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சா  கடத்தி வந்த இரண்டு பேரை திருப்பூர் ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு சாலை மார்க்கமாகவும் ரயில் போக்குவரத்து மூலமாகவும் கஞ்சா கடத்தல் அதிக அளவில் நடந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் ரயில் நிலையம் பிளாட்பாரம் முடிவுறும் இடத்தில் இரண்டு பேர் சந்தேகத்திற்கிடமாக நடந்து வந்தனர்.

அப்பொழுது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில் அவர்கள் கொண்டு வந்த பையில் பெரிய பிளாஸ்டிக் பொட்டலங்கள் இருப்பதை கண்டு அதனை சோதனை செய்தனர். அப்போது அந்தப் பைகளில் கஞ்சா இருந்ததும் வாசம் தெரியாமல் இருக்க பிளாஸ்டிக் டேப்பை கொண்டு முழுவதும் சுற்று இருந்ததும் தெரிய வந்தது. இதை எடுத்து திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் இருந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.

இதனையடுத்து இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த முகமது ரகுப்(22) மற்றும் அல்தாப் (19) என தெரியவந்தது. மேலும் ஒரிசா மாநிலம், பிரம்மப்பூர் பகுதியில் இருந்து கேரளா செல்லும் பாட்னா எக்ஸ்பிரஸில் கஞ்சா கடத்தி வந்ததும் கோவையில் உள்ள ஒருவரிடம் ஒப்படைக்க வந்ததும் தெரிய வந்தது. மேலும் கோவை ரயில் நிலையத்தில் அதிக அளவு பாதுகாப்பு இருப்பதால் மாட்டிக்கொள்வோம் என்ற எண்ணத்தில் திருப்பூரில் இறங்கி பேருந்து மூலம் கோவை செல்ல திட்டமிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: Crime News, Tirupur