பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கக்கூடிய குற்றங்கள் அதிகரித்துள்ளது என்று சொல்வது சரியல்ல; பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும், பாலியல் வன்கொடுமைகளும் தினம் தோறும் காலம் காலமாக நடந்து கொண்டே தான் உள்ளன. ஆனால், அவைகளில் மறைக்கப்பட்டதும் மறுக்கப்பட்டதுமே அதிகம்.
காரணம், இங்கு பெண் என்பவள் குடும்பத்தின் மானத்தை காக்கும் கருவியாக இருப்பதனால், குடும்ப கவுரவத்தினை தாங்கும் தூணாக இருப்பதினால், இங்கு நடக்கும் ஒட்டு மொத்த அரசியலும் பெண்ணின் உடலை சார்ந்தே இருப்பதினால். இங்கு பெண்ணை சார்ந்து குற்றங்கள் நடைபெறாமல் இல்லை. அந்த குற்றங்களை வெளி கொண்டு வர பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்காதது, குற்றங்கள் குறைந்ததாக நம்பப்படுகின்றது.
பெரும்பாலும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் முக்கிய குற்றவாளியாக அவர்களின் நெருங்கிய நண்பர்களோ அல்லது நெருங்கிய உறவினர்களோ அல்லது நன்கு பழகியவர்களோ தான் உள்ளனர். இதனால் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த வன்கொடுமைகளையும், குற்றங்களையும் வெளியில் சொல்லும் பொழுது படிப்பு, வேலை, குடும்பமானம், கௌரவம் என்ற பல கதவுகள் அவர்களை தடுக்கின்றன.
ஆனால் தற்பொழுது சமூக வலைத்தளங்களின் பயன்பாடுகளும், தொலைக்காட்சிகளின் பயன்பாடுகளும் பெண் கல்வி முன்னேற்றமும் காவல்துறையின் செயல்பாடுகளும் பெண்களை தைரியமாக குற்றங்களை சொல்வதற்கு தூண்டுகோலாக அமைந்துள்ளன.
இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி சார்பில் இணைய வழியாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நடக்கும் குற்றங்களை தெரிவிக்க சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தை அரசு ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது, ‘பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி, கணினி வழி குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற குற்றங்களை கையாளும் வகையில் இந்திய அரசு சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
இதுபோன்ற குற்றங்கள் தொடர்பாக புகார் அளிக்க நிர்பயா நிதியின் கீழ் தேசிய இணைய வழி குற்றங்கள் முறையிடல் வலைதளமான
www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரி வெளியிடப்பட்டுள்ளது. இணையவழி நிதி மோடிகள் தொடர்பாக புகார் அளிக்க தேசிய கட்டணமில்லா உதவி அழைப்பு எண் 1930 செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.
இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணைய வழி குற்றங்களை தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் அரசு அலுவலர்கள், தன்னார்வ அமைப்புகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விழிப்புணர்வு பொதுமக்கள் அனைவரிடமும் செல்லும்பட்சத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் முழுவதுமாக குறைந்து விடும்" எனவும் மேலும், புகார் அளிக்கும் நபர்களின் ரகசியங்கள் காவல்துறையினரால் 100% பாதுகாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(திருப்பூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.