திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்த ஆண்டு ஆன்லைன் வழியாக மாணவர் சேர்க்கை நடைபெறுகின்றது.
பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளிவந்த பின் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தனியார் கல்லூரிகளுக்கு இணையாக தரத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்குவதால் அரசு கலை கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை நாளுக்குநாள் அதிகரித்துள்ளது.
பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் சிரமத்தை போக்கும் வண்ணம் இந்த வருடம் அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை ஆன்லைன் வழியாக நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரி, எல் .ஆர். ஜி மகளிர் அரசு கலைக்கல்லூரி , உடுமலை அரசு கலை அறிவியல் கல்லூரி என திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் ஆன்லைன் வழியாகவே மாணவர் சேர்க்கைகள் நடைபெறுகின்றன.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
நேரில் வந்து விண்ணப்பித்தால் ஒரு கல்லூரிக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை மாறி இன்று ஆன்லைன் வழியாக ஒரே நேரத்தில் நான்கு கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற நிலை வந்துவிட்டது. இதன்படி அரசு அறிவித்துள்ள இணையதள முகவரிகளில் மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து எளிதாக கல்லூரிகளில் அட்மிஷன் களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து கோவை பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் திரு.வி. கிருஷ்ணன் அவர்கள் கூறுகையில்..
பெற்றோர்களின் நேரமின்மை மற்றும் மாணவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் இந்த வருடம் ஆன்லைன் வழியாக அட்மிஷன் நடைபெறுகின்றது. மத்திய அரசின் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று கொண்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தமிழகத்தில் உள்ள எந்த அரசு கல்லூரிகளில் வேண்டுமானாலும் சேர விண்ணப்பிக்கலாம் இதற்கான விண்ணப்பத்தை ஆன்லைன் வழி யாகவே செலுத்தலாம். ஒரு கல்லூரியில் இருக்கக்கூடிய எத்தனை பாடப்பிரிவுகளுக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் .ஆனால் அதற்கென்று தனியாக கட்டணம் ஏதுமில்லை. ஒரு கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் பொழுது விண்ணப்ப கட்டணம் ரூ. 50 ஆகவும் 4 கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தால் ரூ.200 என்ற வீதம் மட்டுமே விண்ணப்பக் கட்டணமானது வசூலிக்கப்படுகிறது. அதிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு பதிவுக் கட்டணமாக இரண்டு ரூபாய் மட்டுமே செலுத்தினால் போதுமானது.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 20 பாடப்பிரிவுகள் மற்றும் 835 இடங்கள் உள்ளன. பாடவாரியாக இடங்களின் எண்ணிக்கையை காணலாம்..
பி.ஏ., தமிழ் இலக்கியம் - 30
ஆங்கிலம் இலக்கியம் - 50,
பொருளியல் - 30
வரலாறு - 50
பி.காம்., 100,
பி.காம்.சி.ஏ., 60
பி.காம்., சர்வதேச வணிகம் - 50,
பி.பி.ஏ., - 50
பி.சி.ஏ., - 50,
பி.எஸ்சி கணினி அறிவியல் (ஷிப்ட் 1) - 60,
பி.எஸ்சி., கணினி அறிவியல் (ஷிப்ட் 2) - 60,
பி.எஸ்சி., இயற்பியல் - 24,
வேதியியல் -48
கணிதம் - 75
விலங்கியல் - 48
ஆடை வடிவமைப்பு மற்றும் நாகரிகம் - 50
இந்தப் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், www.tngasa.in என்றஅங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தின் மூலம் ஜூலை15 வரை விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் கேட்கப்படும் சுய விவரங்கள், தேர்வு செய்யப்போகும் கல்லூரி, பாடப்பிரிவுகள் அனைத்திற்கும் விண்ணப்பிக்கலாம்.
கல்விக் கட்டணம் எவ்வளவு?
அதே போல மேற்கண்ட பாடப்பிரிவுகளுக்கு எவ்வளவு கட்டணம் என அறிய இங்கே க்ளிக் செய்க: https://cgac.in/fees.php
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
ஒரு கல்லூரியில் விண்ணப்பிக்க கட்டணம் மற்றும் பதிவுக்கட்டணத்தை ஒருமுறை செலுத்தினால் போதும். ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரி எனில் கூடுதல் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.சந்தேகம் இருக்கும் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள தகவல் வழிகாட்டு மையத்தினை அணுகலாம். மாற்றுத்திறனாளி, விளையாட்டுப்பிரிவு, முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், தேசிய மாணவர் படை 'சி' சான்றிதழ் பெற்றவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு உண்டு. மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல், www.cgac.in என்ற கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூடுதல் தகவல்கள் பெற விரும்புவோர் 0421-2242152 என்ற எண்ணில் தொடர்புகொண்டு விவரங்களை கேட்டுப்பெறலாம்.
ஆன்லைன் வழியாக மாணவர் சேர்க்கை நடைபெறுவது வரவேற்கத்தக்கதாக இருப்பினும் கிராமப்புற மாணவர்கள், ஆண்ட்ராய்ட் மொபைல் இல்லாத பயன்படுத்த தெரியாத பெற்றோர்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் என்பது சவாலாகவே உள்ளது.
செய்தியாளர் - காயத்ரி வேலுசாமி, திருப்பூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tiruppur