திருப்பூர் அருகே சோளிபாளையம் சீனிவாசா நகர் பகுதியை சேர்ந்தவர் கோபாலன்(65). இவரது மனைவி முத்துலட்சுமி(60). இந்த தம்பதிக்கு ஜீவானந்தம், அருண்குமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் திருமணமாகி வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.
கோபாலன் குமார் நகர் பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும், சீனிவாச நகர் பகுதியில் தரைத்தளத்தில் வசித்துக் கொண்டு ஒன்பது வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று பனியன் நிறுவனத்திற்கு சென்ற கோபாலன், இரவு வீடு திரும்பிய போது வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவி முத்துலட்சுமியை மர்ம நபர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு பீரோவில் இருந்த 30 பவுன் நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளை அடித்து தப்பி சென்றது தெரிய வந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கோபாலன், போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து விசரணை மேற்கொண்டு வருகின்றனர் . கொள்ளையர்கள் தடயங்கள் தெரியாமல் இருப்பதற்கு வீட்டில் அனைத்து இடங்களிலும் மிளகாய் பொடியை தூவி சென்றதும் போலீசார் விசாரனையில் தெரிய வந்தது.
Must Read : களத்தில் உயிர்விட்ட கபடி வீரர் விமல்ராஜ் குடும்பத்துக்கு நடிகர் ஆர்.கே.சுரேஷ் ரூ.10 லட்சம் நிதி உதவி
இதையடுத்து மாநகர காவல் ஆணையாளர் பிரபாகரன் உத்தரவின் பேரில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Gold Robbery, Murder, Tirupur