Home /News /tiruppur /

திருப்பூரில் அரசு பேருந்து மோதியதில் பெண் பலி.. கணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி..

திருப்பூரில் அரசு பேருந்து மோதியதில் பெண் பலி.. கணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி..

சிசிடிவி காட்சி

சிசிடிவி காட்சி

எதிர்பாரத விதமாக அரசு பேருந்து அவர்கள் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்ற பெண் பேருந்தின் சக்கரத்தில் விழுந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India
திருப்பூரில் அரசு பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்து குமரன் சாலை வழியாக சென்ற போது, அதே திசையில் இருசக்கரவாகனத்தில் முகமது இசாக் என்பவரும் அவரது மனைவி ரபியதுல் பகிரியா ஆகிய இருவரும் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அரசு பேருந்து அவர்கள் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து ரபியதுல் பகிரியா பேருந்தின் சக்கரத்தில் விழுந்தார். இதில் அந்த பெண், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த அவரது கணவன் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான  திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

இதையும் வாசிக்க: சிங்கப் பெண்களே! ஒரு தந்தையின் பேரன்போடு உடனிருப்பேன்..மாணவிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் மெசேஜ்!

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு போலீசார் அரசு பேருந்து ஓட்டுனர் முத்துமாணிக்கத்திடம் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்திற்கு காரணமான பேருந்து காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டது.
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Accident, Tiruppur, Woman

அடுத்த செய்தி