"கோவிந்தா கோவிந்தா" கோஷத்துடன் திருப்பூா் வீரராகவ பெருமாள் கோயில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
திருப்பூர் நகரின் மையத்தில் உள்ள ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில்களில், ஆண்டுதோறும் வைகாசி விசாக தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்த்திருவிழா நடக்கவில்லை. இந்த ஆண்டுக்கான திருவிழா ஜூன் 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில், நாள்தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சுவாமி திருவீதியுலாவும் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான விஸ்வேஸ்வர சுவாமி கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணி அளவில் தொடங்கியது.
இந்த தேரோட்டத்தை திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் வடம் பிடித்து தொடக்கிவைத்தாா்.
மேலும், வீரராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம் நேற்று (திங்கட்கிழமை) மாலை திருப்பூர் மேயர் திரு. தினேஷ் குமார் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது.

தேரோட்டம்
இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்து சென்றதுடன், சுவாமி தரிசனம் செய்தனா். தோ் நிலைத் திடலில் இருந்து புறப்பட்ட தேரானது ஈஸ்வரன் கோயில் வீதி, பெருமாள் கோயில் வீதி, அரிசிக் கடை வீதி வழியாகச் சென்று மீண்டும் தோ்நிலைத் திடலை வந்தடைந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
மேலும் தேர் திருவிழாவின் போது கும்மியாட்டம் , கோலாட்டம் மயிலாட்டம், ஒயிலாட்டம் கொங்கு தமிழின் நாட்டுப்புற பாடல்கள் என கண்களுக்கும் செவிக்கும் விருந்தளிக்கும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தேரோட்டம் தொடக்க நிகழ்வு
திருப்பூா் மாநகரக் காவல் ஆணையா் ஏ.ஜி.பாபு உத்தரவின் பேரில் 500க்கும் மேற்பட்ட காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.