முகப்பு /செய்தி /திருப்பூர் / மது பாட்டிலில் கிடந்த ரப்பர்... ஆதாரத்துடன் திருப்பூர் ஆட்சியரிடம் புகார் அளித்த நபர்!

மது பாட்டிலில் கிடந்த ரப்பர்... ஆதாரத்துடன் திருப்பூர் ஆட்சியரிடம் புகார் அளித்த நபர்!

மது பாட்டிலுக்குள் கிடந்த ரப்பர்

மது பாட்டிலுக்குள் கிடந்த ரப்பர்

Tiruppur Tasmac bottle rubber | நேற்று மது பாட்டில் வாங்கிய நபர் பாட்டிலுக்குள் ரப்பர் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் அருகே மது பாட்டிலில் ரப்பர் கிடந்தது குறித்து டாஸ்மாக் ஊழியர் முறையாக பதில் அளிக்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட நபர் மனு அளித்தார்.

திருப்பூர் டிஎம்எஸ் நகர் 2வது வீதியை சேர்ந்த செந்தில் நேற்று நல்லூர் பகுதியில் உள்ள அரசு மதுபான கடைக்கு சென்று 190 ரூபாய் மதுபானத்தை 200 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். அப்போதை அதை பார்த்தபோது அதற்குள் ரப்பர் இருந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த செந்தில், இது குறித்து டாஸ்மாக் ஊழியரிடம் கேட்ட போது அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செந்தில், இது குறித்து தனது நண்பர் குருகணேஷிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இருவரும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மது பாட்டிலுடன் சென்று, ரப்பர் கிடப்பது குறித்து நியாயம் கேட்டும், முறையாக பதிலளிக்காத டாஸ்மாக் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மனு அளித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: பாலாஜி, திருப்பூர்.

First published:

Tags: Local News, Tasmac, Tiruppur