முகப்பு /செய்தி /திருப்பூர் / மதுபோதையில் சண்டையிட்ட தந்தை.. இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மகன்.. தாராபுரத்தில் அதிர்ச்சி!

மதுபோதையில் சண்டையிட்ட தந்தை.. இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மகன்.. தாராபுரத்தில் அதிர்ச்சி!

கொலையாளி

கொலையாளி

Thirupur News | இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruppur, India

தாராபுரம் அருகே மது போதையில் தந்தை, மகன் இருவருக்கு இடையில் ஏற்பட்ட  தகராறில் தந்தையை அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர், மாவட்டம் தாராபுரம், அலங்கியம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான தளவாய் பட்டினம் கிழக்கு தெருவை பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (56). அவரது மகன் காளிதாஸ் (29). இவர்கள் இருவரும் அடிக்கடி மதுபோதையில் தகராறு ஏற்படுவது வழக்கம்.

இந்நிலையில் நேற்றைய தினம் இரவு மது போதையில் தந்தை, மகன் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது.  இதில் தண்டபாணி இரும்பு கம்பியை எடுத்து தனது மகன் காளிதாசை தாக்க முற்பட்டுள்ளார்.ஆனால், காளிதாஸ் சுதாரித்து கொண்டு, கம்பியை பிடுங்கி அவரது தந்தையின் பின் மண்டையில் அடித்துள்ளார்.

இதில் ,தண்டபாணி மயங்கிய நிலையில் விழுந்துள்ளார். பின்னர் தகவல் அறிந்து வந்த உறவினர்கள் அவரை மீட்டு  தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே, உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து, தகவல் அறிந்த அலங்கியம் போலீசார் காளிதாசை   பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் . மது போதையில் மகன், தந்தையை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Crime News, Local News, Tirupur